செய்திகள்

கோவையில் ஏப்ரல் 24ந் தேதி தொழில்நுட்ப ஜவுளிக்கான தேசிய முதலீட்டாளர் கூட்டம்

கோவை, ஏப். 15

கோவையில் தொழில்நுட்ப ஜவுளிக்கான தேசிய முதலீட்டாளர் கூட்டம், ஏப்ரல் 24ந் தேதி, அவிநாசி சாலையில் உள்ள ரெசிடென்சி ஓட்டலில் நடைபெற உள்ளது.

மும்பையிலுள்ள இந்திய தொழில்நுட்ப ஜவுளி சங்கம் தொழில்நுட்ப ஜவுளிக்கான தேசிய முதலீட்டாளர் கூட்டத்தை ஏப்ரல் மாதம் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் மற்றும் இந்திய ஜவுளித் தொழில் முனைவோர் கூட்டமைப்பு உடன் இணைந்து நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

இது குறித்து ஜவுளி சங்கத்தின் தலைவர் சுந்தரராமன் பேசியதாவது:

சாதாரணக் கருத்தரங்குகள் போன்றோ, மாநாடுகள் போன்றோ இல்லாமல் மேற்படி தேசிய முதலீட்டாளர் கூட்டமானது, அதில் பங்கு பெறுவோருக்கு தொழில்நுட்ப ஜவுளியில் உள்ள சந்தை வாய்ப்புகளையும் சாத்தியக்கூறுகளையும் உரிய தொழில்நுட்பத்தையும், தொழில்நுட்ப பொருட்கள் பற்றியும் ஆலோசனைகள் வழங்கப்படும் என்றார்.

மேலும், சாதாரண ஜவுளித் தொழில் உற்பத்தியில் இருக்கும் தொழில்முனைவோர் தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியில் ஈடுபடுவதற்கும், அது குறித்து திட்டமிடுவதற்கும் ஒரு வாய்பாக இருக்கும் என்றார்.

கூட்டத்தில், மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகத்தின் செயலர் ராகவேந்திர சிங் கலந்து கொண்டு, துவக்கி வைத்து, சிறப்புரையாற்ற உள்ளார்.

மேலும், வெளிநாட்டிலிருந்து தொழில் சம்மந்தப்பட்ட சிறந்த பேச்சாளர்கள், ஆலோசகர்கள், ஜவுளி சிறப்பு மையங்களில் இருந்து நிபுணர்கள், தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தி செய்யும் இயந்திரங்களின் உற்பத்தியாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் பங்கேற்று, அவர்களது விளக்கங்களை கூற உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *