செய்திகள்

கோவிஷீல்டு 2வது டோஸ் தடுப்பூசி கால அவகாசம் குறைப்பு

புதுடெல்லி, ஜூன்.8-

படிப்பு, வேலைக்கு வௌிநாடு செல்பவர்கள், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு கோவிஷீல்டு 2வது டோஸ் தடுப்பூசி போடுவதற்கான கால அவகாசம் குறைக்கப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி முதலாவது டோஸ் செலுத்திக்கொண்டவர்கள், 84 நாள் இடைவெளிக்குப்பின் 2-வது டோஸ் செலுத்திக்கொள்ளலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆனால் படிப்பு, வேலைக்காக வெளிநாடு செல்பவர்களும், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்பவர்களும், முதல் டோஸ் போட்ட 84 நாட்களுக்கு உள்ளாகவே 2-வது டோஸ் செலுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், முதல் டோஸ் போட்டுக்கொண்ட 28 நாட்களுக்கு பிறகுதான் 2-வது டோஸ் செலுத்தப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட நிலையான செயல்பாடு நடைமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிவிலக்கான நபர்கள் 2-வது டோஸ் செலுத்திக்கொள்வதற்கான வசதி விரைவில் கோவின் அமைப்பில் ஏற்படுத்தப்படும்.

இதுதொடர்பாக மாநிலங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அதிகார குழுவை ஏற்படுத்த வேண்டும். அக்குழு, வெளிநாடு செல்வோர் தொடர்பாக உரிய முறையில் பரிசீலித்து, முதல் டோஸ் போட்டபின் 28 நாட்கள் ஆகிவிட்டதா என்று பரிசீலித்து 2-வது டோசுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *