செய்திகள்

கோவிஷீல்டு: இனி 8 முதல் 16 வாரங்கள் கால இடைவெளியில் 2–வது ‘டோஸ்’ செலுத்தலாம்

புதுடெல்லி, மார்ச்.21-

கொரோனாவுக்கு எதிரான கோவிஷீல்டு தடுப்பூசியின் 2–வது டோசை செலுத்துவதற்கான கால இடைவெளி குறைகிறது.

கொரோனா வைரசுக்கு எதிரான அரசின் தடுப்பூசி திட்டத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி உள்ளது.

இந்த தடுப்பூசியின் முதல் டோஸ்–ஐ செலுத்திய பின்னர் 12 முதல் 16 வாரங்களில் 2–வது டோஸ் தற்போது செலுத்தப்படுகிறது. இந்த கால இடைவெளி, தேசிய கொரோனா தடுப்பூசி உத்தியின் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மற்றொரு தடுப்பூசியான கோவேக்சின் தடுப்பூசியை பொறுத்தமட்டில் முதல் டோஸ் செலுத்தி, 28 நாளில் 2வது டோஸ் செலுத்தப்பட வேண்டும்.

இந்த நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி 2–வது டோஸ் பெறுவதற்கான கால இடைவெளியை குறைப்பது என தடுப்பூசிக்கான உயர் அமைப்பான நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழு (என்.டி.ஏ.ஜி.ஐ.) பரிந்துரை செய்துள்ளது.

அதாவது கோவிஷீல்டு தடுப்பூசியின் 2-வது டோசை 12 முதல் 16 வாரங்களில் செலுத்தலாம் என்பதை 8 முதல் 16 வாரங்களில் செலுத்தலாம் என்று மாற்றி அமைக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த முடிவு பல நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மீதமுள்ள 6 முதல் 7 கோடி வரையிலான நபர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசியின் 2–வது டோஸ் செலுத்த வழி பிறக்கும்.

இது எப்போது அமலுக்கு வரும் என தெரிவிக்கப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published.