செய்திகள்

கோவில் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை

தினக்கூலி, தொகுப்பூதிய முறையில் பணிபுரியும்

கோவில் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை

திருக்கோவில் தொழிலாளர்கள் யூனியன் சார்பில் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை.பிப்.13-

தினக்கூலி, தொகுப்பூதிய முறையில் பணிபுரியும் கோவில் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியன் புதிய கிளை துவக்க விழாவில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருக்கோவில் தொழிலாளர்கள் யூனியன் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட வில்லிவாக்கம், பாடி, அயனாவரம், அண்ணா நகர், முகப்பேர் , திருமுல்லைவாயில் பகுதிக் கிளை துவக்க விழா வில்லிவாக்கத்தில் நடைபெற்றது. இதில் சென்னை கோட்ட துணைத் தலைவர் ஆர்.இரவிசங்கர், செயற்குழு உறுப்பினர் சுந்தரமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில பொதுச் செயலாளர் அ.முத்துசாமி, மாநில பொருளாளர் மல்லை மு.பக்கிரிசாமி, மாநில இணை பொதுச் செயலாளர் கே.ஆர்.பாலசுந்தரம், நிர்வாக அதிகாரிகள் சங்கம் பொதுச் செயலாளர் கோ.ஜெயப்பிரகாஷ் நாராயணன், கோட்ட தலைவர் எஸ்.தனசேகர், செயலாளர் இரா.ரமேஷ், பொருளாளர் தே.குகன், அமைப்பாளர் கா.முருகன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் எஸ்.செந்தமிழ் செல்வி, கொள்கை பரப்பு செயலாளர், ஜி.வேலாயுதம் ஆகியோர்கள் பங்கேற்று பேசினர்.

வில்லிவாக்கம் பகுதி கிளை கவுரவ தலைவராக சுந்தரமூர்த்தி, தலைவராக கே.இரவிசங்கர், செயலாளராக குமரன், பொருளாளராக கே.எம்.சேது மாதவன், அமைப்பாளராக அயன்புரம் குணசேகர், கொள்கை பரப்புச் செயலாளராக வில்லிவாக்கம் டி.நந்தகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில் சட்டசபை விதி எண்.110ன் கீழ் திருக்கோவிலில் பணிபுரியும் தினக்கூலி, தொகுப்பூதிய முறையில் பணிபுரியும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய அரசாணை வெளியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *