புதுடெல்லி, ஜூலை9-
கோவில் நிதியை ஆடம்பர செலவுக்கு பயன்படுத்தக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
ஆலயம் காப்போம் அமைப்பின் தலைவர் பி.ஆர்.ரமணன் சார்பில் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழ்நாட்டில் கோவில்களுக்கு வரும் உண்டியல் பணம் உள்ளிட்ட நன்கொடை நிதியை செலவிடும் திட்டம் குறித்தும், அந்த நிதி அத்தியாவசியமற்ற வகையில் சொகுசு காரியங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு பொதுநல நிதிக்கு எடுத்துக் கொள்ளப் பட்டவற்றை மீண்டும் கோவில்களுக்கு அளிக்க வேண்டும்’ என்றும் அந்த மனுவில் அவர் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஆண்டு ஆகஸ்டு 29-ந்தேதி தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஆலயம் காப்போம் அமைப்பு சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜல் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது, நன்கொடையை பெறுவதிலும், செலவழிப்பதிலும் முறைகேடு உள்ளதா எனக் கேட்டனர். மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஹரிபிரியா பத்மநாபன், இவ்வாறு பெறப்படும், செலவிடப்படும் நிதியை தணிக்கைக்கு உட்படுத்து வதில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணங்களை சுட்டிக்காட்டினார்.
அப்போது நீதிபதிகள், ‘கோவில் நிதி கல்வி போன்ற சமூக நல திட்டங்களுக்கு செலவிட்டால் பரவா யில்லை. ஆனால், சொகுசு கார்கள் போன்ற ஆடம்பர செல வுக்கு பயன்படுத் தக்கூடாது’ என கருத்து தெரிவித்து, மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தர விட்டு, வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.