செய்திகள்

கோவிட்–19 சாதாரண ஜலதோஷ வைரசாக எதிர்காலத்தில் மாறும்

இங்கிலாந்து மருத்துவ வல்லுநர் கணிப்பு

டெல்லி, அக். 9–

கோவிட்–19 வைரஸ் சாதாரண ஜலதோஷ வைரஸ் போல் எதிர்காலத்தில் மாறிவிடும் என்றும் அதற்கு நீண்ட காலம் ஆகும் என, இங்கிலாந்து தேசிய சுகாதார சேவையின் முன்னாள் தலைவர் சர் மால்கம் கிராண்ட் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில், இங்கிலாந்து தேசிய சுகாதார சேவையின் முன்னாள் தலைவர் சர் மால்கம் கிராண்ட் பங்கேற்று தெரிவித்துள்ளதாவது:–

சாதாரண வைரசாகும்

கோவிட்–19 வைரஸ் தொடர்பாக இன்னும் நாம் நிறைய புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. அதற்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தாலும், இன்னும் அது பெருந்தொற்றாகத்தான் தொடர்கிறது. அதிகப்படியான மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்திய அமெரிக்காவில், தற்போதும், கோவிட் வைரசால் வாரத்துக்கு 53 ஆயிரம் பேர் உயிரிழந்து வருகிறார்கள்.

இதைவிட ஐரோப்பாவின் நிலை மோசமாக இருக்கிறது. அங்கு வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஆனால், கோவிட்–19 வைரஸ் சாதாரண ஜலதோஷ வைரஸ் போல் மாறிவிடும். ஆனால் அதற்கு இன்னும் நீண்ட காலம் ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *