நியூயார்க், செப். 27–
கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதாக உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸக் தெரிவித்துள்ளார்.
சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுகாதாரரீதியாக மட்டும் இன்றி, பொருளாதாரரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இறுதியாக, விஞ்ஞான உலகின் தொடர் முயற்சிகளால் கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
மஸ்க் குற்றச்சாட்டு
இருப்பினும், கொரோனா தடுப்பூசியின் நம்பகத்தன்மை என்பது தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. அது, ஆபத்தானது, பாதுகாப்பற்றது போன்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. ஆனால், இதை பொய்யாக்கும் விதமாக, தடுப்பூசியின் செயல்திறன் தொடர்பாக பல்வேறு மருத்துவ ஆய்வுகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதாக உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.