நாடும் நடப்பும்

கோவிட் சிகிச்சைக்கு பாரம்பரிய மருந்துகள்: பிரிக்ஸ் நிபுணர்கள் ஆலோசனை

பிரிக்ஸ் (BRICS) அமைப்புக்கு தற்போது இந்தியா தலைமை வகிக்கிறது அல்லவா? இதனால் பிரிக்ஸ் நாடுகளின் பாரம்பரிய மருந்து தயாரிப்புகளின் உபயோகத்தை ஒழுங்குபடுத்துவதில் இணைந்து செயல்படுவது குறித்த இணைய கருத்தரங்கை ஆயுஸ் அமைச்சகம் சமீபத்தில் நடத்தியது.

இந்நிகழ்ச்சியில் இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா, ரஷ்யா, பிரேசில் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பாரம்பரிய மருந்து நிபுணர்கள் மற்றும் இதன் தொடர்புடைய பலரரும் கலந்து கொண்டனர்.

இதேபோல் இரண்டு காணொலி காட்சி கூட்டங்களை கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் ஆயூஷ் அமைச்சகம் நடத்தியும் உள்ளது.

சென்ற வாரம் நடந்த இக்கூட்டத்துக்கு ஆயுஷ் அமைச்சகத்தின் ஆலோசகர் டாக்டர் மனோஜ் நெசாரி தலைமை வகித்தார். இந்த இணைய கருத்தரங்கில் பேசிய டாக்டர் மனோஜ் நெசாரி பாரம்பரிய மருத்துவத் துறையில் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டுறவைப் பலப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

பாரம்பரிய மருந்துகளில் பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பை அதிகரிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும் பாரம்பரிய மருந்துகளுக்கான பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் எனவும் இந்த இணையக் கருத்தரங்கில் இந்தியா சார்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டது.

பிரிக்ஸ் நாடுகளின் இடையே பாரம்பரிய மருந்து தயாரிப்புகளின் உபயோகத்தை மேம்படுத்த இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக் காட்டினார்.

ஆயுஷ் மருந்துகள் மூலம் கோவிட் பாதிப்பைக் குறைக்க இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளும் இந்த இணையக் கருத்தரங்கில் எடுத்துக் கூறப்பட்டது.

கோவிட்-19-க்கு சிகிச்சை அளிக்கும் தேசிய மருத்துவ மேலாண்மை நெறிமுறையில் ஆயுர்வேதா மற்றும் யோகா ஆகியவற்றை ஒருங்கிணைப்பதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் இயக்குனர் டாக்டர் வி.எம்.கடோச் தலைமையிலான இடைநிலைக் குழு நிபுணர்களின் பரிந்துரைகளை தொகுத்து ஓர் அறிக்கையை 2020ல் உருவாக்கியது. இந்த கண்டுபிடிப்புகள், பயன்கள், மருத்துகளின் பாதுகாப்பு தன்மை ஆகியவை

கோவிட்-19 க்கான நிதி ஆயோக் பரிந்துரைப்படி இந்த நெறிமுறை உருவாக்கப்பட்டது. இதன் பயன்கள் மற்றும் வசதிகளை உலகம் தெரிந்து கொள்ள பிரிக்ஸ் தலைமை பொறுப்பில் இருக்கும் நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. அதை நாம் சரியாக பயன்படுத்திக் கொண்டு விட்டோம்.

விரைவில் உலகசுகாதார மையமும் இதன் சிறப்பை உணர்ந்தால் நல்லது தான்!

அந்த நல்ல நாள் வரும்:; அதுவரை காத்திருப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *