செய்திகள்

கோல்கட்டா ஹோட்டலில் பயங்கர தீ விபத்து:

Makkal Kural Official

தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 14 பேர் பலி

கோல்கட்டா, ஏப்.30

கோல்கட்டாவில் ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பலியாகினர்.

புர்ராபஜார் மெச்சுவா பழச்சந்தை பகுதியில் ஹோட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதை அறிந்த ஊழியர் ஒருவர் தப்பிக்க எண்ணி, மேலிருந்து குதித்து இறந்தார். தீ விபத்து அறிந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

கொளுந்துவிட்டு எரிந்த தீயை அவர்கள் அணைக்கும் பணியில் இறங்கினர். சிறிது நேர போராட்டத்துக்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

அதன் பின்னர் ஹோட்டலில் அவர்கள் சென்று பார்த்த போது உள்ளே, வெவ்வேறு அறைகளில் 14 பேர் பலியானதை கண்டறிந்தனர்.

இதுகுறித்து பேசிய போலீஸ் கமிஷனர் மனோஜ் வர்மா, மொத்தம் 14 உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளனர். பலர் மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகி உள்ள விவரம் வெளியாகி இருக்கிறது.

கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பிரபு, குழந்தைகள் என 3 பேர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *