அமைச்சர் துரைமுருகன் துவக்குகிறார்
300க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்பு
சென்னை, நவ 10–
உலகத் தமிழர் பொருளாதார 11வது மாநாடு, மலேசியாவில் உள்ள கோலாம்பூரில் 15ந் தேதி முதல் 17ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இம்மாநாட்டை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைக்கிறார். மலேசியாவிற்கான இந்திய தூதர் பி.என்.ரெட்டி தலைமை ஏற்கிறார்.
17ந் தேதி ஞாயிற்றுக்கிழமை நிறைவு விழாவில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு நிறைவுரை ஆற்றுகிறார். மலேசிய உச்சநீதிமன்ற நீதிபதி வசீர் ஆலம் விருது வழங்குகிறார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் டத்தோ செரி டாக்டர் சுப்பிரமணியம், மலேசிய கல்வித் துறை முன்னாள் துணை அமைச்சர் டான் செரி மாரிமுத்து ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.
புதுச்சேரி தொழில்துறை அமை்சசர் நமச்சிவாயம், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன், புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் வி.வி.சிவக்கொழுந்து, விஜிபி நிறுவனங்களின் குழுமத் தலைவர் டாக்டர் வி.ஜி. சந்தோஷம், பிஜிபி நிறுவனக் குழுமத் தலைவர் பழனி ஜி. பெரியசாமி, அபுபக்கர் மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.
இம்மாநாட்டின் வரவேற்பு குழு தலைவராக மலேசிய நாட்டு தேசிய நில நிதி கூட்டுறவு சங்க இயக்குனர் டத்தோ. பி.சகாதேவன், முன்னாள் துணை அமைச்சர் டான் சிரி மாரிமுத்து,ஆலோசகர் நாகராஜன், தொழில் தலைவர் முபாரக் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து மநாட்டை நடத்துகின்றனர். சென்னை வளர்ச்சிக் கழகம் மற்றும் உலகத் தமிழர் பொருளாதார நிறுவனத் தலைவர் விஆர்எஸ் சம்பத் உலகம் முழுவதும் மாநாட்டு பணிகளை ஒருங்கிணைத்து பணியாற்றி வருகிறார்.
இம்மாநாட்டில் முதலீடு வணிக வாய்ப்புகள், தொழில் மேம்பாடு சந்திப்புகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. சிறப்பு பேச்சாளர்கள், சொற்பொழிவு ஆற்ற உள்ளனர். 10க்கும் மேற்பட்ட அமர்வுகள் நடைபெற உள்ளது. புகழ்மிக்க வணிகத் தலைவர்கள், தமிழர்களின் தலைவர்கள், தொழில் வல்லுநர்கள் என முக்கிய பிரமுகர்களும் உலகத் தமிழர் மாமணி/உலக வணிகத் தலைவர் மாமணி விருதுகள் வழங்கப்பட உள்ளன. கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. விருந்துடன் கூடிய சந்திப்புகள் நடைபெற உள்ளன.
உலகத் தமிழர் பொருளாதார மையம் மற்றும் சென்னை வளர்ச்சிக் கழகம் இணைந்து நடத்தும் இம்மாநாடு, மத்திய–மாநில அரசுகள் பல உலக நாடுகளின் வர்த்தக தலைவர்கள், தொழிலதிபர்கள், தொழில்புரிவோர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோரின் உதவியோடு நடைபெற உள்ளது.
இம்மாட்டில் தொழிலதிபர்கள்,வணிக நிறுவனத் தலைவர், விழை தொழில்புரிவோர், சுயதொழில்புரிவோர், புதிய கண்டுபிடிப்பில் வெற்றி பெற்றவர்கள் இப்படி எல்லோரும் ஒன்று கூடவும் வணிக வளர்ச்சி, முதலீடு வாய்ப்புகள், பொருளாதார வளர்ச்சிக்காக விழைதொழில் புரிவோரிடம் பணிகளை ஒப்படைப்பு செய்தல், உலகளாவிய கூட்டுறவை ஏற்படுத்துதல் தொடர்பான விவாதங்களும் நடைபெறுகிறது.
இம்மாநாடு உலகம் முழுவதிலிருந்து உள்ள தமிழ்க்குடி மக்கள் இந்திய வம்சாவளி இந்திய தொழிலதிபர்கள், வணிகத் தலைவர்கள் 20க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 300க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். 80 பேச்சாளர்கள், 18 அமர்வுகள் நடைபெற்ற உள்ளன. மாநாட்டின் நிறைவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
முதன்முறையாக தமிழ் சமூகத்திற்கு பாடுபட்ட 50 ஆண்டுகள் நிறைவு செய்த அமெரிக்காவில் உள்ள தமிழ்நாடு பவுண்டேஷன் நிறுவனத்திற்கு சிறப்பு விருது வழங்க இருக்கிறோம். அதேபோல 2017ல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 4வது உலகத் தமிழர் பொருளாதார மேம்பாட்டுக்கு பெரிதும் உதவும் வகையில் இந்நிறுவனமும் விருது பெறுகின்றது.
இத்தகவலை மாநாட்டு அமைப்பளரும் தலைவருமான டாக்டர் விஆர்எஸ் சம்பத் வெளியிட்டார்.