சினிமா

கோலார் தங்க வயல் மையக் கருவில் உருவான K.G.F. Chapter 1 சண்டை படம்

தமிழ்திரையில் ஒரு புதிய நாயகன் உதயாமாகிறான்– யஷ். கர்நாடக மக்களின் உள்ளத்திலும் உதட்டிலும் ஓங்கி ஒலிக்கும் பெயர் தற்போது தமிழகத்தில். ”பஸ் டிரைவரின் மகனாக திரைத்துறையில் எந்த பின்புலமின்றி போராடி, வெற்றி பெற்ற கர்நாடகத்தின் கலைஞர் யஷ்” என்று பாகுபலி டைரக்டர் ராஜமவுலியால் பாராட்டு பெற்றவர்.
இவரின் நடிப்பில் வெளிவரும் படம் K.G.F. Chapter 1.
கோலார் தங்கவயலின் பின்னணியைக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம். 1978-ல் ஈரானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே நடந்த பனிப்போரால் அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்குமான பகை அதிகமாகியது. அதன் பாதிப்பு மொத்த உலகத்தையும் ஆட்டி படைத்தது. எண்ணெய், காபி, இரும்பு, பருத்தி இவற்றை இதோட சேர்ந்து தங்கத்தின் விலையும் விண்ணத் தொட்டது. 1970 இறுதி மற்றும் 1980 தொடக்கங்களில் தங்க வயலில் கிடைக்கும் தங்கத்தால் அந்த இடத்தை கைப்பற்ற மாபியாக்கள் இடையே பெரிய போட்டி நடந்தது. அரசியல் தலைவர்கள் பன்னாட்டு பெரும் புள்ளிகள், மாபியாக்கள், இடையே நடந்த போட்டியில் போராடி அடிமைகளை மீட்டு தங்கச் சுரங்கத்தில் தனது சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்தியதே K.G.F Chapter 1 படத்தின் கதைக் கருவாகும். இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது.
தங்கச்சுரங்கத்தின் அரங்க அமைப்புகள் கோலார் தங்க வயலில் போடப்பட்டு புகை, புழுதி மற்றும் நெருப்புகளுக்கு இடையே 8 மாதங்கள் 4 ஆயிரம் துணை நடிகர்களுடன் படமாக்கப்பட்டது. K.G.F. திரைபடம் இரண்டு பகுதிகளை கொண்டது. முதல் பகுதி. K.G.F Chapter 1 திரைபடம் டிசம்பர் 21 ம் தேதி இந்தியா முழுவதும் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் ரிலிஸ்யாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *