செய்திகள்

கோயம்பேட்டில் தக்காளி கிலோ ரூ.80க்கு விற்பனை

சென்னை, மே 14–

சென்னை கோயம்பேட்டில் தக்காளி சில்லரை விற்பனை விலை ரூ.80 ஆக உயர்ந்து உள்ளது.

கோயம்பேடு மார்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினசரி தக்காளி விற்பனைக்கு வருகிறது. கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.8-க்கும், சில்லரை கடைகளில் ரூ.10க்கும் விற்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாத இறுதியில் கோயம்பேட்டில் தக்காளி விலை கிலோ ரூ.50க்கு விற்பனையானது.

தென் மாவட்டங்களில் பெய்த திடீர் மழை காரணமாக அந்த பகுதிகளில் நடைபெற்று வந்த தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அங்குள்ள வியாபாரிகளும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தக்காளியை கொள்முதல் செய்ய வந்ததால் கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளி வரத்து குறைய தொடங்கியது. இதனால், தக்காளி விலை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, சென்னை கோயம்பேட்டில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.70 ஆக அதிகரித்து உள்ளது. தக்காளி சில்லரை விற்பனை விலை ரூ.80 ஆக உயர்ந்து உள்ளது. இதனால், இல்லத்தரசிகள், ஓட்டல் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.