சென்னை, நவ.24:
‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற உன்னத நோக்கத்துடனான எழுச்சிப் பயணத்தைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையத்தில் 30–ந் தேதி – ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்.
சட்டமன்றத் தொகுதி வாரியாக, கடந்த 7.7.2025 முதல் 10.10.2025 வரை, 174 தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
இந்தச் சுற்றுப் பயணங்களின்போது, ஆங்காங்கே மக்கள் அலைகடலெனத் திறண்டிருந்து, எடப்பாடி பழனிசாமிக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளித்து ஆதரவு தெரிவித்த நிகழ்வுகள், அனைவரையும் பிரம்மிக்க வைத்தது.
இந்நிலையில், இந்த எழுச்சிப் பயணத்தின் தொடர்ச்சியாக, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், கோபிசெட்டிபாளையம், முத்துமஹால் திருமண மண்டபம் அருகில், 30–ந் தேதி — ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணியளவில், நடைபெற உள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புப் பேருரை ஆற்ற உள்ளார் என்று அண்ணா தி.மு.க. தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.
![]()





