செய்திகள்

கோடைவிடுமுறை முடிந்து திரும்புபவர்களுக்காக 2 ஆயிரத்து 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்

அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு

சென்னை, ஜூன் 3–-

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வருகிற 7–-ந்தேதி (புதன்கிழமை) திறக்கப்பட உள்ளது. இதையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்பிய வண்ணம் இருக்கின்றனர். அந்த வகையில் வார இறுதி நாட்களில் கூடுதலாக பயணிகள் தமிழ்நாட்டில் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு இருப்பதாக போக்குவரத்து கழகம் கருதுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் இருந்து வார இறுதி நாட்களில் சென்னைக்கு 900 பஸ்களும், பல்வேறு இடங்களில் இருந்து அதாவது கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருவுக்கும் 1,300 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இந்த சிறப்பு பஸ்களை கண்காணித்திட அனைத்து பஸ் நிலையங்களிலும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள். மேலும், மதுரை மற்றும் திருச்சியில் இருந்து முன்பதிவு செய்யாத பயணிகளின் தேவைகளுக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கவும் போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *