வாழ்வியல்

கோடையிலிருந்து காக்கும் நுங்கு !

கோடையில் வாட்டி வதைக்கும் அம்மை நோய்கள் வராமல் தடுக்க நுங்கு பயன்படுகிறது. உடலில் நோய் எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பவர்கள் எளிதில் சின்னம்மை, பெரியம்மை, தட்டம்மை போன்ற நோய்களுக்கு உள்ளாவார்கள்.

சீதோஷ்ண நிலையால் உடல் சூடாகி பித்தம் அதிகமாகி அதனோடு கபமும் சேர்ந்து கிருமித்தொற்று உண்டாவதன் மூலம் அம்மை வருகிறது. இவை 7 நாட்கள் முதல் 15 நாட்கள்வரை இருக்கும் என்றாலும் இந்த நாள்கள் உபாதையாக இருக்கும். இந்த நீர் கொப்புளங்கள் சுருங்க சுருங்க உடலில் அரிப்பை ஏற்படுத்தும் அரிப்பு தாங்காமல் சொரிந்து விடுவதால் அங்கு மீண்டும் அம்மை கொப்புளங்கள் உருவாகும். அம்மை கண்டவர்கள் தினமும் நுங்கை சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் குளிர்ச்சி அடையும். கொப்புளங்களின் மீது நுங்கு நீரை தடவி வருவதன் மூலம் கொப்புளங்கள் குளிர்ச்சியடைந்து அரிப்பை உண்டாக்காமல் இருக்கும். கோடை துவங்கும் போதே தினமும் நுங்கு சாப்பிட்டு வந்தால் அம்மை நோய் பெரும்பாலும் நெருங்காமல் செய்துவிடலாம். ​

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *