வாழ்வியல்

கோடைக் காலத்தில் குளிர்ச்சியாக பானங்கள் அருந்துவது உடல் நலத்துக்கு கேடு!

கோடைக் காலத்தில் மிகவும் குளிர்ச்சியாக பானம் அருந்துவது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் . கவனமாக இருக்கவேண்டும்.

கோடைக் காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து காத்துக் கொள்வதற்கு, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தாகமே இல்லையென்றாலும், நிறையத் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பழங்கள் பப்பாளி மாம்பழம் கிர்ணிப் பழம் தர்பூசணி போன்றவற்றை உட்கொள்ளலாம்.

பெரிவகையை சார்ந்த பழங்களான ஸ்ட்ரா பெரி, ப்ளூபெரி ப்ளாக் பெரி, கூஸ்பெரி, ராஸ்பெரி, ஆப்பிள், செர்ரி, காய்கறிகள், பாகற்காய், கோஸ், காலிபிளவர், வெள்ளரிக்காய், பீன்ஸ், புதினா போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். உணவில் சாலட் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். குளிர்பானங்கள் லெமன் ஜூஸ் இளநீர் நீர்த்த மோர் பிரெஷ் ஜூஸ்.

மிகவும் குளிர்ச்சியாக பானம் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். குளிர்ச்சியாக பானம் அருந்துவது அந்த நேரத்துக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தினாலும் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும். வடை அப்பளம் சமோசா சிப்ஸ் பஜ்ஜி போன்ற எண்ணெய் பலகாரங்களைத் தவிர்க்க வேண்டும். சூடான, மசாலா உணவுப் பதார்த்தங்களை அறவே தவிர்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *