செய்திகள்

கோடம்பாக்கம் கால் டாக்சி டரைவர் வங்கி கணக்கில் ரூ.9 ஆயிரம் கோடி

சென்னை, செப். 21–

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுநர் ராஜ்குமார் என்பவரது வங்கிக் கணக்கில் திடீரென ரூ.9,000 கோடி பணம் திடீரென வரவு வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழனி நெய்க்காரப்பட்டி சேர்ந்த ராஜ்குமார், கோடம்பாக்கத்தில் நண்பருடன் தங்கி வாடகை கார் ஓட்டி வருகிறார். கடந்த செப்டம்பர் 9-ம் தேதி மாலை 3 மணி அளவில் காரில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் ராஜ்குமாரின் வங்கிக் கணக்கிற்கு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் இருந்து ரூ.9000 கோடி வரவு வைக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது.

முதற்கட்டமாக ராஜ்குமார் அதில் எத்தனை பூஜ்ஜியங்கள் உள்ளது என்பதை எண்ணவே முடியாமல் எவ்வளவு பணம் வந்துள்ளது என குழம்பி இருந்தார். அதன் பின் தனது வங்கிக் கணக்கில் வெறும் 15 ரூபாய் இருக்கும் நிலையில், யாரோ தன்னை ஏமாற்ற முயல்கிறார்கள் என நினைத்துள்ளார். இதனையடுத்து தனது வங்கிக் கணக்கில் இருந்து நண்பருக்கு ரூ.21,000 பணம் அனுப்பிய பிறகு, 9 ஆயிரம் கோடி ரூபாய் பணம் தன் வங்கிக் கணக்கிற்கு வந்ததை உறுதி செய்து அவர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

பணத்தை திரும்ப பெற்ற வங்கி

இந்நிலையில் நண்பருக்கு 21 ஆயிரம் ரூபாய் பணம் பகிர்ந்த உடனேயே, மீதமுள்ள பணம் அனைத்தையும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது.

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைமை அலுவலகம் இருக்கும் தூத்துக்குடியில் இருந்து ராஜ்குமாரை தொலைபேசி மூலம் அழைத்து 9000 கோடி ரூபாய் பணம் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் பகிரப்பட்ட ரூ.21 ஆயிரம் பணத்தை செலவு செய்ய வேண்டாம் என வங்கி நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. பின்னர் சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் கிளையில் இருந்தும், டிரைவர் ராஜ்குமார் தரப்பில் இருந்தும் வழக்கறிஞர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இறுதியாக 9000 கோடி ரூபாய் பணத்தில் இருந்து பரிவர்த்தனை செய்யப்பட்ட ரூ.21,000 பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டாம் எனவும், அதற்கு பதிலாக வாகன கடன் வழங்குவதாக வங்கி தரப்பிலிருந்து சமரசம் பேசி அனுப்பி வைத்ததாக ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *