செய்திகள்

கோடநாடு கொலை வழக்கு: அடுத்த மாதம் ஒத்திவைப்பு

ஊட்டி, செப். 23–

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் 24.4.2017 அன்று காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக சயான் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர், கோடநாடு சம்பவ வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் வாகன விபத்தில் இறந்த கனகராஜ் செல்போன் உரையாடல் பெற கூடுதல் கால அவகாசம் கேட்கப்பட்டதால் ஒரு மாதம் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சயான், வாளையார் மனோஜ், ஜித்தின் ஜாய், சம்சீர் அலி உள்ளிட்டோர் ஆஜராகி இருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை அடுத்த மாதம் 28-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published.