செய்திகள்

கோகுல மக்கள் கட்சி தலைவர் ரம்ஜான் வாழ்த்து

Spread the love

சென்னை, மே 23–

கோகுல மக்கள் கட்சியின் தலைவர் எம்.வி. சேகர் வெளியிட்டுள்ள ரம்ஜான் வாழ்த்து கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புனிதமான ரமலான் மாதத்தின் 30 நாட்களும் இஸ்லாமிய பெருமக்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகிய நோன்பு கடைபிடித்து, விண்ணில் பிறை தோன்றும் ஈகைத் திருநாளை முன்னிட்டு ரமலான் பெருவிழா கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் கோகுல மக்கள் கட்சியின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்ணலார் நபிகள் நாயகம் கடைபிடித்துக் காட்டிய வாழ்க்கை நெறிகளை பின்பற்றும் இஸ்லாமிய பெருமக்கள், விருந்தோம்பும் உயர்ந்த பண்புடன் பிறர் பசி போக்கும் மனிதநேயத்துடன் அனைவரிடத்திலும் அன்புகாட்டி வாழ்ந்து வருகின்றனர்.

அன்பு, ஈகை, நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்பது பெருமகனார் நபிகள் நாயகத்தின் போதனை. இந்தக் கோட்பாடுகளை ஜாதி மதங்களை கடந்து நாம் அனைவரும் என்றென்றும் கடைபிடிக்க ரமலான் திருநாளில் உறுதியேற்போம். சமய நல்லிணக்கத்தைக் கட்டிக்காக்க அனைவரும் உறுதி கொள்வோம்.

இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் கோகுல மக்கள் கட்சியின் சார்பில் எங்களது ரம்ஜான் நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை தெரிவித்து மகிழ்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *