கொல்கத்தா, செப். 14–
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சுற்றியுள்ள தடை உத்தரவுகள் 30–ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி. கர் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய முதுநிலை மருத்துவ மாணவி வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவ ஒட்டுமொத்த மருத்துவ உலகையும் அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது. இதையடுத்து, மேற்கு வங்கத்தில் பல்வேறு போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
முன்னதாக, மருத்துவமனையின் பாதுகாப்புப் பொறுப்பைக் கருத்தில் கொண்டு மருத்துவமனையைச் சுற்றிலும் மக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு செப்டம்பர் 30–ந்தேதி வரை மேலும் நீட்டித்துள்ளது.
ஆர்.ஜி.கர் மருத்துவமனைக்குச் செல்லும் சாலைகளைத் தவிர, ஷயாம்பஜார் பைபாயின்ட் கிராஸிங் ஆகிய இடங்களில் 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டது. மேலும் ஆபத்தான ஆயுதங்கள் மற்றும் அமைதியைச் சீர்குலைக்கும் எந்தவொரு பொருளும் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.