சிறுகதை

கொலைக் கைதி – ராஜா செல்லமுத்து

எங்கு பார்த்தாலும் ஊரடங்கு. எங்கு பார்த்தாலும் அமைதி. மக்கள் நடமாட்டம், அதிக மற்ற வீதிகள். இப்படி நோய் காலம் குறைந்ததற்கு முன்னால்நடந்த நிகழ்வை நம் கண்முன் நிறுத்தினார் குமரன்.

நடந்த நிகழ்வைக் கேட்கும்போது நமக்கே உயிரில் பாதி உறைந்தது. குமரன் அந்த நிகழ்வை சொல்ல ஆரம்பித்தார்.இப்போது சகஜ நிலைக்கு நாடு திரும்பி இருந்தாலும் இருந்தாலும் அப்போது நடந்த நிகழ்வு நம்மை ஒரு மாதிரியாக செய்தது.அப்படி ஒரு நிகழ்வு தான் குமரன் வாழ்வில் நடந்தது.

அதை விரிவாக கூற ஆரம்பித்தான் குமரன். குமரனின் பேச்சை செவிமடுத்து கேட்டுக்கொண்டிருந்தான் மணி

நோய்க் காலத்துல நான் எங்க தாத்தா, தம்பி மூன்று பேர் மட்டும் தான் இருந்த வீட்டில் அப்போ எந்த பொருள் வாங்க போனாலும் வெளியே போக முடியாது. பிரச்சனை …. அது இதுக்கு போறோம்? அப்படின்னு கேள்வி கேப்பாங்க.

ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு போறதுக்கு பாஸ் தேவைப்பட்டது. இப்படி எத்தனையோ கட்டுப்பாடுகள், இந்த உலகத்தில் இருந்தாலும் எங்க வீட்டில நடந்த விஷயம் நான் சந்தித்து, இந்த விஷயம் ரொம்பவே கஷ்டமா இருந்தது என்றான் குமரன்

அப்படி என்ன கஷ்டம் குமரன் என்று மணி கேட்டான்.

நோய்க் காலமாய் இருந்ததுனால நான் என் தம்பி தாத்தா மூன்று பேரும் வீட்டில் இருந்தோம். ஒரு ராத்திரி திடீர்னு ஒருத்தன் எங்க வீட்டுக்குள்ள வந்தான்

அவன் யாரு என்னங்கிற விஷயம் எங்களுக்கு தெரியாது. அப்படி வந்தவன் எங்களை விரட்ட ஆரம்பிச்சான். தான் ஒரு கொலைகாரன் அப்படின்னு சொன்னான். அந்தக் கொலையில இருந்து தப்பிக்க, அதுக்குதான் இந்த வீட்டில் வந்து தங்கி இருக்கிறேன் அப்படின்னு எங்க வீட்டில தங்க ஆரம்பிச்சான்.

இது நோய் பாதித்த வீடு அப்படின்னு எழுதி ஒட்ட வச்சான். எல்லாரும் வீட்டை பார்த்துட்டு போய்கிட்டு இருந்தாங்க. வீட்ல இருந்த எங்களுக்கு ரொம்ப பயமா இருந்தது. அவன் ஒரு கொலைகாரன் எங்களை ஏதாவது பண்ணி

ருவான் . அப்படின்னு நினைச்சு ரொம்ப பயந்துகிட்டு இருந்தோம். அப்போ அந்தக் கொலைகாரன் தனக்குத் தேவையான எல்லா விஷயத்தையும் எங்க மூலமா நிறைவேற்றி விட்டான்.

அவனுக்கு ஏதாவது பொருள் வாங்கணும்னா எங்கள ஒருத்தனை வெளி அனுப்புவான். அப்படி வெளியே அனுப்பும்போது செல்போன்ல வீடியோ ஆன் பண்ணி வச்சிட்டு அதை பார்த்துட்டே போகச் சொல்லுவான். அப்படி வெளியே போன ஒருத்தவங்க வீட்டுக்கு திரும்பி வருவது வரைக்கும் யாராவது ஒருத்தர் கழுத்தில் கத்தி வைத்து இருப்பான். இதுக்கு பயந்துகிட்டே நாங்க அவன் தங்கியிருந்தத வெளில சொல்லல.. ஒரு வாரம் அப்படித்தான்.

அதுக்கப்புறம் தான் என்னோட தம்பி ஜன்னல் வழியா இவன் தங்கி இருக்கிற விஷயத்தை எதிர் வீட்டுக்கு எழுதி அத நூதன முறையில் அனுப்பினான். அத புரிஞ்சிக்கிட்டு அவங்க ஏதோ சின்ன பையன் சும்மா எழுதுறான்னு அப்படின்னு நினைச்சிட்டு, அவங்க எதும் பண்ணல…. ஆனா அடிக்கடி இப்படி எழுதி போடுவதை பார்த்து தான் எங்க வீட்டுக்கு வந்து வீட்டுக்குள்ள ஒரு கொலைகாரன் இருக்கிறத கண்டுபிடிச்சாங்க.

நாங்க சொன்னது முன்னே தெரிஞ்சா எங்கள உசுரோட கொண்டிருப்பான் இந்த பாவி.

ஆனா என் தம்பியோட புத்திசாலித்தனம் எங்களை காப்பாற்றிருச்சி.. இல்லன்னா அந்த கொலைகார. எங்களை சேர்த்துக் கொன்னுருப்பான். அதுக்கு அப்புறம் போலீஸ் வந்தது. அந்தக் கொலைகாரனை புடிச்சிட்டு போனாங்க. அவன் இருக்கிற வரைக்கும் எங்களுக்கு உயிர் பயம் அதிகமா இருந்துச்சு. என்ன செய்வானோ? ஏது செய்வானோ? அப்படின்னு பயந்து கொண்டே இருந்தோம். ஒருவழியா அவன போலீஸ் புடிச்சிட்டு போனதுக்கு அப்புறம் தான் நாங்க நிம்மதியா பெருமூச்சு விட்டோம்.

இந்த அனுபவம் இந்த நோய்க்கான இடத்துல எங்களுக்கு ஒரு பெரிய படிப்பினை கொடுத்தது .

ஏன்னா நோய்க்காலம் ஒருத்தர் வீட்டுக்கு ஒரு வீடு யாரும் வர மாட்டார்கள் என்ற தைரியத்தில் தான் அந்த கூட எங்க வீட்டுக்கு வந்தான்

அந்த நிகழ்வு நினைச்சா, அதிருது என்று குமரன் முன்னால் நடந்த கதையை சொல்லிக்கொண்டிருந்த போது மணி உட்பட நிறைய பேர் அதை ஆவலாக கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

குமரன் வாழ்வில் நடந்த அந்த நிகழ்வு கேட்டுக் கொண்டிருந்த அவர்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது

திருடர்கள், கொலைகாரர்கள் சாதாரண மனிதர்களை விட பெரிய புத்திசாலிகள். அவர்களிடம் நாம் திறமையாக நடந்து கொள்ளாவிட்டால் நாம் தோற்றுப் போவோம் என்ற ஒரு உண்மையை புரிந்து கொண்டு,

குமரனின் கதையைக் கேட்டு அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தனர். அத்தனை பேர்களும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *