வாழ்வியல்

கொரோன அறிகுறியைக் கண்டறிய புதிய கடிகாரம்: சென்னை ஐஐடி கண்டுபிடிப்பு

கொரோனோ அறிகுறியினை முன்கூட்டியே கண்டறிய சென்னை ஐஐடி கண்டுபிடித்துள்ள ஸ்மார்ட் கடிகாரத்தை பயன்படுத்துபவரின் வெப்பநிலை, இதயத் துடிப்பு, ஆக்ஸிஜன் செறிவு அளவுகளின் தரவு ஆகியவற்றை பெற முடியும்.

ஐஐடி-யில் உள்ள தொழில் முனைவோர் மையத்தின் மூலம் கொரோனோ நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான சாதனத்தை வடிவமைத்துள்ளனர்.

ஸ்மார்ட் வாட்ச் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இதனை கையில் கட்டும்போது மனித உடலின் வெப்பநிலை, இதய துடிப்பு மற்றும் இரத்த ஆக்ஸிஜன் செறிவு உணர்திறன் ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடியும் .

உடல் வெப்ப நிலையில் மாற்றம் ஏற்ப்படுவதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள இயலும் என்பதால் கொரோனா நோய் தொற்றை முன்கூட்டியே தற்காத்துகொள்ள இயலும். புளூடூத் உதவியுடன் செயல்படும் வகையில் இச்சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது ..இதனை சென்னை ஐ.ஐ டி வடிவமைத்துள்ள மியூஸ் ஹெல்த் ஆப் என்ற மொபைல் செயலியுடன் இணைத்து இச்சாதனம் செயல்படும்

இதன் மூலம் இதனை பயன்படுத்துபவரின் வெப்பநிலை, இதயத் துடிப்பு, ஆக்ஸிஜன் செறிவு அளவுகளின் தரவு ஆகியவற்றை பெற முடியும். மேலும் கொரோனா கட்டுபடுத்தப்பட்ட பகுதிகளுக்குள் செல்கின்றபோது மத்திய அரசு வடிவமைத்துள்ள ஆரோக்யா சேது செயலியில் இருந்து எச்சரிக்கை தகவல் பெற முடியும் என்று சென்னை ஐ.ஐ.டி.தெரிவித்துள்ளது.

விரைவில் ஸ்மார்ட் வாட்ச் வடிவிலான இந்த சாதனத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை ஐ.ஐ.டி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *