செய்திகள்

கொரோனா வைரஸ்: பெட்ரோல், கியாஸ் சப்ளை முறைகளை மேம்படுத்த ஆய்வு நூல்

கொரோனா வைரஸ்: பெட்ரோல், கியாஸ் சப்ளை முறைகளை மேம்படுத்த ஆய்வு நூல்

இந்தியன் ஆயில் சேர்மன் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா வெளியிட்டார்

சென்னை, ஆக.1–

உலகப் பிரபல பாஸ்டன் ஆலோசனை நிறுவனம் கூட்டுடன் கொரோனா வைரஸ் பாதிப்பால் பெட்ரோல், கியாஸ் சப்ளை முறைகளை மேம்படுத்த ஆய்வு செய்யப்பட்டு, முடிவுகளைக் கொண்டு தயாரான நூலை இந்தியன் ஆயில் சேர்மன் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா வெளியிட்டார்.

பல்வேறு நிறுவன மேம்பாட்டுக்கு ஆலோசனை வழங்கும் பாஸ்டன் நிறுவனம், இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு குரூட் ஆயில் தட்டுபாடின்றி கிடைத்தல், போன்ற சவால்களை எடுத்துரைத்து, தீர்வுகளையும் வழங்கி உள்ளது. தட்டுபாடின்றி எரி பொருள் கிடைக்க இதற்காக முதலீடுகள் அவசியமாகிறது. மக்களுக்கு தட்டுபாடின்றி பெட்ரோல், டீசல், ஆயில், கியாஸ் கிடைக்க ஏற்பாடு செய்து வருகிறது. விமானங்களுக்கும் பெட்ரோல் தட்டுபாடின்றி சப்ளை செய்கிறது என்று இந்தியன் ஆயில் மார்க்கெட்டிங் டைரக்டர் குர்பீத் சிங் தெரிவித்தார்.

கொரோனா காலத்தில் விலை கூடுதல் காரணமாகவும், பெட்ரோல், கியாஸ் சப்ளை பாதிக்கப்படாமல் இந்தியன் ஆயில் கவனமாக உள்ளது என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *