சினிமா செய்திகள்

‘கொரோனா’ பிணங்களை புதைக்க நான் வருகிறேன்: நடிகர் மன்சூர் அலிகான் அறிவிப்பு

பிரபல பட அதிபர் சுவாமிநாதன் மரணம் கேட்டு வேதனை

‘கொரோனா’ பிணங்களை புதைக்க நான் வருகிறேன்:

நடிகர் மன்சூர் அலிகான் அறிவிப்பு

சென்னை, ஆக். 11–

‘கொரோனா’வால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் நபர்களின் பிணங்களை புதைக்க நான் வருகிறேன்…’ என்று தமிழ் பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார்.

லட்சுமி மூவி மேக்கர்ஸ் அதிபர்களில் ஒருவரும் காமெடி நடிகர் ‘கும்கி’ அஸ்வினியின் தந்தையுமான சுவாமிநாதன் ‘கொரோனா’ நோய்க்கு நேற்று (திங்கள்) பிற்பகல் பலியானார்.

(கமல்ஹாசனின் அன்பே சிவம், விஜய்யின் பகவதி, தனுஷின் புதுப்பேட்டை, கார்த்திக்கின் கோகுலத்தில் சீதை உள்பட 25 படங்களை கே.முரளீதரன், ஜி.வேணுகோபால்– இருவருடன் இணைந்து எடுத்தவர்).

‘‘சுவாமிநாதனின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டார்.

சுவாமிநாதனின் மறைவை கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அவர் ஒரு மிகச் சிறந்த மனிதாபிதமானி.

கொரோனா நோய் பாதிக்கப்பட்டு ஒருவர் இறந்தால்… இறுதிச் சடங்கில் போய் பங்கேற்க முடியாத ஓர் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதைப் பார்க்கும் போது சொல்ல முடியாத ஆதங்கம், வேதனை தான் ஏற்படுகிறது.

கொரோனா நோய் பாதிப்பால்– நாமெல்லாம் வஞ்சிக்கப்படுகிறோம் : நோய்கு இறப்பவர்களை அடக்கம் பண்ணுவதற்கு சிலர் தயக்கம் காட்டுவதாகவும், பல இடங்களில் எதிர்ப்பு கிளம்புவதாகவும் வரும் செய்திகளைக் கேட்கும் போது மனதுக்கு வேதனையாக இருக்கிறது.

கொரோனாவுக்கு இறந்துவிடும் நபருக்கு இறுதி மரியாதை செலுத்த என்னை விடுங்கள். நான் வருகிறேன். நேரில் போய் என் கையாலேயே சடலத்தைத் தொட்டுத் தூக்கி, அடக்கம் பண்ணுகிறேன். இதற்கு நான் தயார்… ‘‘கொரோனா பாதிப்பு விரையில் நம்மை விட்டு நீங்க வேண்டும்’’

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *