செய்திகள்

கொரோனா பாதுகாப்பு பணியில் 55 வயதுக்கு மேற்பட்ட காவலர்களுக்கு ஓய்வு கொடுங்கள்

Spread the love

சென்னை, மார்ச் 26–

கொரோனா பாதுகாப்பு பணியில் 55 வயதுக்கு மேற்பட்ட காவலர்களுக்கு கட்டாயம் ஓய்வு கொடுக்க வேண்டும், பணியில் இருப்பவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், காவல் நிலையங்களுக்குள் வருபவர்கள் கை, கால்கள் கழுவி விட்டு உள்ளே வர அனுமதிக்க வேண்டும் என்று சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனர் சுதாகர் அறிவுரை வழங்கியுள்ளார்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனர் சுதாகர், கிழக்கு மண்டலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கு மைக் மூலம் அறிவுரை வழங்கினார்.

காவல் பணியில் இருப்பவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், காவல் நிலையங்களுக்கு வருபவர்கள் கட்டாயம் கை, கால்களை கழுவிவிட்டு உள்ளே வர அனைத்து ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மேலும் தற்போது தடை உத்தரவு அமலில் இருப்பதால் பாதுகாப்பு பணிக்கு தேவையான காவலர்களை மட்டுமே பணியில் வைத்துக் கொண்டு மற்ற காவலர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.

அதே போல் இரவு ரோந்து பணிக்கு காவலர்கள், சப்–இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர்களை சுழல்முறையில் பணியில் அமர்த்த வேண்டும். ஒருவரே தொடர்ந்து பணியில் இருக்க வேண்டாம். மேலும் 55 வயதுக்கு மேற்பட்ட காவலர்களுக்கும், உடல்நல குறைவான காவலர்களுக்கும் பணி ஒதுக்காமல் கட்டாயம் ஓய்வு கொடுக்க வேண்டும். காவலர்கள் கொரோனா வைரஸ் தாக்காமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு இணை கமிஷனர் சுதாகர் அறிவுரை கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *