செய்திகள்

கொரோனா பரிசோதனை: எடப்பாடி, ஓ.பி.எஸ்.க்கு தொற்று இல்லை

சென்னை, செப். 12–

வரும் திங்கட்கிழமை தமிழக சட்டசபை கூட உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு தொற்று இல்லை என்று தெரிவித்துள்ளது.

நேற்று சபாநாயகர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், சபைக்கு வரும் அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

14–ந்தேதி சட்டமன்ற கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் நடக்கிறது.

இதில் பங்கேற்க உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும். சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என சபாநாயகர் ப.தனபால் அறிவித்திருந்தார்.

அதன்படி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் 3 நாட்களுக்கு முன்னரே பரிசோதனை நடத்தப்படவேண்டும் என முடிவெடுக்கப்பட்டு

எம்.எல்.ஏ.க்கள் வீடுகளுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

இதுதவிர ஊடகங்கள், அரசுத்துறை அலுவலர்கள், ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. அதேப்போன்று சபாநாயகர் தனபாலுக்கும் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *