செய்திகள்

கொரோனா நோயாளிக்கு இரட்டை நுரையீரல் மாற்றுப்பதிய சிகிச்சை வெற்றி; ஐதராபாத் கிம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

இந்தியாவில் முதல் முறையாக

கொரோனா நோயாளிக்கு இரட்டை நுரையீரல் மாற்றுப்பதிய சிகிச்சை வெற்றி;

ஐதராபாத் கிம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

சென்னை, செப். 14

உடல்நல பராமரிப்பு வழங்கலில் இந்தியாவில் முன்னணியில் இருக்கும் ஐதராபாத் கிருஷ்ணா இன்ஸ்டிடியுட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் கிம்ஸ் மருத்துவர்கள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளி ஒருவருக்கு இரட்டை நுரையீரல் மாற்றுப்பதிய அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக செய்திருக்கின்றனர். இத்தகைய அறுவைசிகிச்சை சாதனை இந்தியாவில் இதுவே முதன்முறையாகும். வெற்றிகரமான சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து இந்நோயாளி உடல்நலத்துடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்தியாவில் இருதய மற்றும் நுரையீரல் மாற்றுப்பதிய அறுவைசிகிச்சைகளில் ஒரு முன்னோடியாக மதிக்கப்படும் டாக்டர். சந்தீப் அட்டவார் – தலைமையின் கீழ், ஐதராபாத் – அமைந்துள்ள இம்மருத்துவமனை குழுமத்தின் பிரதான கிளையில் இந்த அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.

பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகார் நகரத்தைச் சேர்ந்த 32-வயதுள்ள ரிஸ்வான் (மோனு) என்ற இந்நோயாளி, இணைப்புத்திசு புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இவரது நுரையீரல்களை கணிசமாக பாதித்த இந்நோய்யை குணப்படுத்துவதற்கு நோயாளியின் இரண்டு நுரையீரல்களையும் அகற்றிவிட்டு, மாற்று நுரையீரல்களை பதியம் செய்வது மட்டுமே ஒரே நிரந்தர விருப்பத்தேர்வு என்ற நிலையில் இருந்தது. .

டாக்டர் சந்தீப் அட்டவார், கொரோனா குறித்து பேசுகையில், நுரையீரலில் தீவிரமான இணைப்புத்திசு புற்றுநோய் பாதிக்கப்பட்டவராக இந்நோயாளி இருந்தார். இவருக்கு ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று, முன்பே மிக மோசமாக இருந்த இவரது நுரையீரல் பாதிப்பு நிலையை இன்னும் அதிக சிக்கலானதாக ஆக்கியது. அதிர்ஷ்டவசமாக இந்நோயாளிக்குப் பொருத்தமான நுரையீரல்கள், கொல்கத்தாவில் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட ஒரு நபரிடம் இருப்பது கண்டறியப்பட்டது என்றார்.

அந்நபரிடம் இருந்து அறுவடை செய்யப்பட்ட நுரையீரல்கள், இந்நோயாளியின் உயிரை காப்பாற்றுவதற்காக ஐதராபாத்திற்கு உடனடியாக விமானம் மூலம் எடுத்து வரப்பட்டன. இந்த மாற்றுப்பதிய சிகிச்சைமுறை அதிக சிக்கலானதாக இருந்தது மற்றும் சிறு தவறுகள் கூட நிகழாதவாறு இது செய்யப்பட வேண்டிய அவசியம் இருந்தது. இத்தகைய நிலையில் உரிய நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட இந்த நுரையீரல் மாற்றுப்பதிய அறுவைசிகிச்சை இந்நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதற்கு உதவியிருக்கிறது என்றும் தெரிவித்தார்.

டாக்டர். சந்தீப் அட்டவார், இந்நாட்டில் அதிக அனுபவம் மிக்க இருதய மற்றும் நுரையீரல் மாற்றுப்பதிய அறுவைசிகிச்சை நிபுணராக பெரிதும் மதிக்கப்படுபவர். 24-ஆண்டுகளுக்கும் மேல் அனுபவ டாக்டர். அட்டவார், இதுநாள் வரை 12,000-க்கும் அதிகமான இதய அறுவைசிகிச்சைகளை செய்திருக்கிறார். நுரையீரல்கள், இருதயம் மற்றும் செயற்கை இருதய உட்பதியங்கள் ஆகியவற்றிற்காக 250-க்கும் கூடுதலான மாற்றுப்பதிய அறுவைசிகிச்சைகளை செய்த சாதனை வரலாறு இவருடையதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *