செய்திகள்

கொரோனா தொற்றை குணப்படுத்த சித்தா வைத்தியம் யோகா பயிற்சி: அமைச்சர் க.பாண்டியராஜன் தகவல்

தண்டையார்பேட்டை மண்டலத்தில்

கொரோனா தொற்றை குணப்படுத்த சித்தா வைத்தியம் யோகா பயிற்சி:

அமைச்சர் க.பாண்டியராஜன் தகவல்

 

சென்னை, ஜூன் 14–

தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சித்தா வைத்தியமுறையுடன் ஒரு பகுதியாக யோகாசன பயிற்சி மூலம் நோய் தொற்றை குணப்படுத்த முடியும் என அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில், தண்டையார்பேட்டை மண்டலத்தில் வேகமாக பரவிவரும் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அமைச்சர் க.பாண்டியராஜன், தலைமையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு பணி நான்காவது நாளாக இன்று வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி பகுதியில் நடைபெற்றது.

இதில் பெரம்பூர் பி.வி.காலனி, கொடுங்கையூர் திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மருத்துவ முகாமில் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்ததுடன் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களின் பணிகளை அமைச்சர் பாண்டியராஜன், வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ், மற்றும் கொரோனா தடுப்பு முதன்மை மண்டல சிறப்பு அதிகாரி கே.பி.கார்த்திகேயன், மண்டல மருத்துவ அலுவலர் கயல்விழி, ஆகியோருடன் நேரில் சென்று பார்வையிட்டு கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் குறித்தும் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு அனைவருக்கும் கபசுர மூலிகை பவுடர், மற்றும் முககவசங்களை வழங்கினார்.

அப்போது அமைச்சர் பாண்டியராஜன் பேசிய போது,

தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் நடைபெற்று வரும் ஆய்வு பணிகளில் நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக தண்டையார்பேட்டை மண்டலத்தில் நோய் தொற்றை கட்டுப்படுத்த ஆங்கில மருத்துவத்துடன் ஒரு பகுதியாக சித்தா வைத்தியமுறை மற்றும் யோகாசன பயிற்சி மூலம் புதிய வழிமுறைகளை நடைமுறை படுத்தி நோய் தொற்றை கட்டுப்படுத்தப்படும் என தெரிவித்தார்.

மேலும் மண்டலத்தில் இயங்கிவரும் நோய் தொற்று தடுப்புக்கான மனநல ஆலோசனை மய்யம் முலம் நல்ல பலனை அளித்துள்ளது என்றும் நோய் தொற்றுள்ளவர்களுகான வீடுகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு அவர்களை கண்காணிப்பட்டு வருவதுடன் தண்டையார்பேட்டை மண்டலத்தில் நோய் குணமாகி வருவோரும் அதிகரித்துள்ளது அதே போன்று நோய் கட்டுப்படுத்தும் பணிகளும் விரைந்து நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

இதில் மண்டல நல அலுவலர் குமரகுருபரன், மற்றும் பகுதி செயலாளர் ஆர்.எஸ்.ஜெனார்தனம், ஜெ.கே.ரமேஷ் , டிஒய்கே.செந்தில், வியாசை எம் இளங்கோவன், மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *