செய்திகள்

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை சென்னை நகரில் 60.48 சதவிதமாக உயர்ந்துள்ளது

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை

 சென்னை நகரில் 60.48 சதவிதமாக உயர்ந்துள்ளது

அமைச்சர் காமராஜ் தகவல்

 

சென்னை, ஜூன் 30–

சென்னையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60.48 சதவிதமாக உயர்ந்துள்ளது என உணவு துறை அமைச்சர் இரா. காமராஜ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் காமராஜ் தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் மண்டல பகுதிகளில் நடைபெற்ற மருத்துவ முகாம்களை நேரில் ஆய்வு செய்தும் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் மேற்கொண்டார். தமிழ்நாட்டில் தற்போது பெருநகர் சென்னையில் பல பகுதிகளில் கொரோனா தொற்று நோய் பரவலாகி வருவதை கட்டுப்படுத்த முதலமைச்சரின் ஆலோசனைப்படி தமிழ்நாடு அரசு கொரோனா நோய் தொற்று தடுப்பு பணிகளை மிக சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.

அமைச்சர் காமராஜ் தியாகராய சாலையில் உள்ள ஆலயம்மன் கோயில் தெருவில் நடைபெற்ற மருத்துவ முகாமை ஆய்வு செய்தார், பின்னர் பொதுமக்களுக்கு முககசம், கபசுர குடிநீர் மற்றும் கையேடு ஆகியவற்றை வழங்கினார். பின் முகாமில் அவர் கூறியதாவது:–

முதலமைச்சர் என்னை போன்ற அமைச்சர்களை 3 மண்டலங்கள் பிரித்து கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பணியாற்ற உத்திரவிட்டார். நாங்கள் 8–ந் தேதி முதல் பணிகள் தொடர்ந்து செய்து வருகிறோம். 8–ந் தேதி அன்று சென்னையில், குணமடைந்தோர் சதவிதம் 50.04 ஆக இருந்தது. இன்று 60.48 சதவிதமாக உயர்ந்துள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

38 சதவித நபர்கள் தான் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களும் வெகு விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்கள். இவர்களுக்கு உரிய சிகிச்சைகள் முதலமைச்சர் உத்தரவுக்கு இணங்க அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மண்டலத்திலும் நடைபெறும் 40 மருத்துவ முகாம்களில் 4 ஆயிரம் பேர் பரிசோதனை செய்துகொள்கிறார்கள். இனி வரும் காலங்களில் தொற்று எண்ணிக்கை வெகுவாக குறையும் என்று நம்புவோம்.

கையிருப்பில் அத்தியாவசிய பொருட்கள்

தமிழகத்தை பொறுத்தவரை அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் கையிருப்பில் இருக்கிறது. முதல்வர் நிவாரண தொகை வீடு வீடாக சென்றுதான் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டார். சமூக இடைவெளி, முகக்கவசம், கையுறை வழங்கவேண்டும் என்று பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் அவர்கள் வீடுகளுக்கு சென்று பாதுகாப்பாக வழங்கி வருகிறார்கள். சென்னை பொறுத்தவரை 90.79 சதவிதம் வழங்கப்பட்டுள்ளது, மதுரையில் 82.90 சதவிதம் வழங்கபட்டுவிட்டது’’.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் கே.பி.தாசன் சாலையில் உள்ள சமுதாய கூடத்தில் மண்டலம் 9 தொடர்புடைய அலுவலர் மற்றும் கொரோனா நோய் தடுப்பு பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். ஆய்வின் போது அவர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்தும் தொடர்ந்து நோய் தொற்று ஏற்படாமல் இருக்க மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.

பின்னர் தி-.நகர் ரங்கநாதன் தெருவில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் துக்காராம் முதல் தெருவில் நடைபெற்ற மருத்துவ முகாமை ஆய்வு செய்து பொது மக்களுக்கு முககசம், கபசுர குடிநீர் மற்றும் கையேடு ஆகியவற்றை அமைச்சர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிகளின் தி-.நகர் சட்டமன்ற உறுப்பினர் பி.சத்தியா, மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் சுதன், டாக்டர்.எஸ்.வினீத், எஸ்.லஷ்மி, கே.மீனா, மண்டல அலுவலர்கள் ரவிகுமார், எம்.பரந்தாமன், மற்றும் தொடர்புடைய மண்டல அலுவலர்களும் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *