செய்திகள்

கொரோனா தடுப்பூசி போடும் மையங்களை ‘மேப் மை இந்தியா’ வலைதளத்தில் பார்க்க ஏற்பாடு

சென்னை, மார்ச் 13–

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி மையங்களைக் கண்டறிய இந்தியர்களுக்கு உதவுவதற்காக இந்திய அரசு ஏற்பாடு செய்த ஆத்மா நிர்பார் (AatmaNirbhar) ஆப் சேலஞ்சின் வெற்றியாளர் ‘மேப் மை இந்தியா’ வரைப்படங்கள் மற்றும் அருகிலுள்ள தேடல் அம்சங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

மக்களுக்கு வழிகாட்டவும், அருகிலுள்ள மையங்களுடன் இணைக்கவும் இந்த அம்சங்களை அவர்களின் உத்தியோக பூர்வ கொரோனா தடுப்பூசி பதிவு தளமாக cowin.gov.in இந்திய அரசு ஒருங்கிணைத்துள்ளது. ‘மேப் மை இந்தியா’ (MapmyIndia) வரைப்படங்கள் பயன்பாடு அல்லது வலைத்தளத்தைப் பயன்படுத்தி இந்தியாவின் எந்த நகரம்சிறுப்பட்டணம் அல்லது கிராமம் முழுவதும் உள்ள தடுப்பூசி மையங்களை மக்கள் தேடலாம் என்று இதன் தலைமை நிர்வாக அதிகாரி ரோகன் வர்மா தெரிவித்தார்.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில்கொரோனா தொடர்பான அனைத்து இடங்களையும் சோதனைசிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் மையங்கள் மற்றும் கட்டுப்பாட்டு மண்டலங்களை நிகழ்நேர புவியியல் ரீதியாக வரைபடமாக்கும் பணியை இது ஏற்றுக் கொண்டதுமுக்கியமான தடுப்பூசி முயற்சியை தடையின்றி செய்யஅனைத்து தடுப்பூசி மையங்களையும் இது வரைப்படங்களில் வைத்துள்ளதுஇதை பயன்படுத்திஅருகிலுள்ளதடுப்பூசிமையங்களைத்தேடிகண்டுபிடித்துஅவர்களுக்குவழிகாட்டுதல்களைப்பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *