செய்திகள்

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பாஸ்போர்ட் எண் இணைக்கலாம்

சென்னை, ஜூன் 25–

வெளிநாடு செல்வோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழில் பாஸ்போர்ட் எண்ணை இணைத்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என பல்வேறு நாடுகள் அறிவித்துள்ளன. குறிப்பாக இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு காரணங்களுக்காக செல்வோர் பலர் இருக்கின்றனர். இதனால் இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்வோர் கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகளில் தவறாமல் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சூழலில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் கோவின் இணையதளம் மூலம் தங்கள் தடுப்பூசி சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். அதேசமயம் வெளிநாடு செல்பவர்களுக்கு வசதியாக பாஸ்போர்ட் எண் விவரங்களையும் தடுப்பூசி சான்றிதழில் பதிவிடலாம் என தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

என்ன செய்ய வேண்டும்?

வெளிநாடு செல்வோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழில் பாஸ்போர்ட் எண்ணை http://selfregistration.cowin.gov.in இணையதளத்தில் இணைக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நெறிமுறைகளை வெளியிட்டுள்ள தமிழக அரசு, கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பாஸ்போர்ட் எண்ணை இணைக்க என்ற இணையதளத்தில் செல்ல வேண்டும். பிறகு அதில் உங்கள் செல்போன் எண்ணை பதிவிட வேண்டும். நீங்கள் அளித்த செல்போன் எண்ணுக்கு 6 இலக்க எண்கள் கொண்ட ஓடிபி வரும். அதை குறிப்பிட்டுள்ள இடத்தில் பதிவிட வேண்டும்.

‘raise an issue’ என்ற டேப் வலதுபுற ஓரத்தில் இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும். அதை கிளிக் செய்து பிறகு திரையில் தோன்றும் ‘Add Passport details’ என்பதை கிளிக் செய்து, உங்கள் பாஸ்போர்ட் குறித்த விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

பிறகு திரையில் “your request for changing ID under process” என்று தோன்றும். இறுதியாக உங்களின் பாஸ்போர்ட் எண் உங்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் வெற்றிகரமாக அப்டேட் செய்யப்படும். பிறகு நீங்கள் உங்களது கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *