வர்த்தகம்

கொரோனா தடுப்பூசி குளிரூட்டும் வசதியுடன் அதிநவீன ப்ரீசர்கள்: கோத்ரேஜ் நிறுவனம் அறிமுகம்

கோவை, பிப். 12–

கோத்ரேஜ் அண்டு பாய்ஸ், நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை வடிவமைப்பதில் மேலும் ஒரு படி முன்னேறும் வகையில், தனது வர்த்தகப் பிரிவான கோத்ரேஜ் அப்ளையன்சஸ் மூலமாக இந்தியாவில் செயல்படுத்தப்படும் கோவிட் தடுப்பூசி நடவடிக்கைகளில் இணைந்துள்ளது.

கோத்ரேஜ் அண்டு பாய்ஸ், அதிக உணர்திறன் கொண்ட தடுப்பூசி மருந்துகளைச் சரியான வெப்பநிலையில் பராமரிக்கும் மருத்துவ குளிரூட்டும் தீர்வுகளை இந்தியாவிலேயே தயாரித்துள்ளது இந்நிறுவனம். தடுப்பூசி குளிரூட்டும் வசதியை மேலும் வலுப்படுத்தும் வகையில், அல்ட்ரா லோ டெம்பரேச்சர் ப்ரீசர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

எதிர்கால

சமீபத்திய மேம்பாடுகள் குறித்து கோத்ரேஜ் அன்ட் பாய்ஸ் மேனுபேக்சரிங் கம்பெனியின் தலைவர் அண்டு நிர்வாக இயக்குனர் ஜம்ஷைத் கோத்ரேஜ் பேசுகையில், இன்று, கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தை திறம்படக் கையாள்வதில் உலகம் முழுக்கவுள்ள நாடுகள் சவாலைச் சந்திக்கின்றன. போதுமான குளிரூட்டும் வசதியின்மை, இன்று மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக விளங்குகிறது. இது தடுப்பூசிகள் திறனைப் பாதித்து, அதன் மூலமாக மனித சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கிறது.

கோத்ரேஜ், தடுப்பூசிகளுக்கான மேம்படுத்தப்பட்ட குளிர் சேமிப்பு தீர்வுகள் மற்றும் விநியோகம் மூலமாக, கோவிட்-19-க்கு எதிரான போரில் அரசுகளுக்கு உதவுகிறது. எங்களது புதிய அறிமுகமான அல்ட்ரா லோ டெம்பரேச்சர் ப்ரீசர்கள், எதிர்காலத்தில் தடுப்பூசிகளுக்கேற்ப இந்தியா தயார் நிலையில் இருக்க உதவும் என்று தெரிவித்தார்.

குறைவான வெப்பநிலை

இந்த மேம்பாடுகள் பற்றி கோத்ரேஜ் அப்ளையன்சஸின் வர்த்தகத் தலைவர் மற்றும் நிர்வாக துணைத்தலைவர் கமல் நந்தி பேசுகையில்,

தற்போது இந்தியாவில் தடுப்பூசிகளைப் பயன்படுத்தும் வகையில் முறையே 2சி- 8சி மற்றும் -20சிக்கும் கீழான வெப்பநிலையில் தடுப்பூசிகளை பராமரிக்க இவை உதவுகின்றன. எங்களது புதிய அல்ட்ரா லோ டெம்பரேச்சர் ப்ரீசர்கள் -80சிக்கும் கீழான வெப்பநிலையை அளிக்கின்றன.

கடைக்கோடியில் போக்குவரத்து வசதியற்ற பகுதிகளுக்கு மொபைல் கிளினிக் மூலமாக தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதிலுள்ள சவால்களை எதிர்கொள்ள, அதிகத் திறன் கொண்ட தடுப்பூசி குளிரூட்டும் வசதியைப் பெற உதவியாக, பல்வேறு பங்குதாரர்களுடன் நாங்கள் கூட்டுச் செயல்பாட்டில் ஈடுபடுகிறோம் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *