செய்திகள்

கொரோனா தடுப்பூசி உற்பத்தி: பாரத் பயோ டெக்குடன் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை, ஜூன்.4-

தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தி தொடர்பாக பாரத் பயோடெக் நிறுவனத்துடன், மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினர்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தியை தொடங்குவதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில் தடுப்பு மருந்து உற்பத்தி நடவடிக்கைகளை தொடங்க தமிழக அரசுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் இந்தியாவில் கோவேக்சின் என்ற தடுப்பு மருந்தை தயாரித்து வழங்கும் பாரத் பயோடெக் நிறுவனத்துடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனை தலைமை செயலகத்தில் நேற்று மாலை நடந்தது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி உற்பத்தி திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை மேலாண்மை இயக்குனர் சுஜித்ரா இலா, செயல் இயக்குனர் சாய்பிரசாத் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *