டெல்லி, மார்ச் 23–
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை கட்டாயமாக்கவில்லை என இந்திய ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பூசி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின்போது, அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என இந்திய அரசு உத்தரவிட்டதாக தமிழ்நாடு அரசின் சார்பில் வாதிடப்பட்டது.
இதற்கு இந்திய ஒன்றிய அரசு சார்பாக வாதிட்ட சொலிசிடர் ஜெனரல், துஷார் மேத்தா விளக்கம் அளித்தார். அதாவது, 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். ஆனால் அது கட்டாயமல்ல என்பது தான் இந்திய ஒன்றிய அரசின் நிலைப்பாடு என அவர் கூறினார். முன்னதாக தடுப்பூசி செலுத்தாதவர்களாலேயே, கொரோனா உருமாற்றம் அடைவதாக தமிழ்நாடு அரசு சார்பில் கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.