செய்திகள்

கொரோனா: சிறந்த பணி அலுவலர்கள், தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: கமிஷனர் பிரகாஷ் வழங்கினார்

சென்னை மாநகராட்சியில் சுதந்திர தினம்

கொரோனா: சிறந்த பணி அலுவலர்கள், தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்:

கமிஷனர் பிரகாஷ் வழங்கினார்

சென்னை, ஆக. 15–

சென்னை மாநகராட்சியில் இந்திய சுதந்திர தினவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது. ரிப்பன் கட்டட வளாகத்தில் சிறப்பு அதிகாரி மற்றும் கமிஷனர் கோ.பிரகாஷ் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

சென்னை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு களப்பணியில் ஈடுபட்டபோது, வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நலமுடன் பணிக்கு திரும்பிய மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் பாராட்டி அவர் சான்றிதழ்களை வழங்கினார்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான களப்பணியில் சீரிய முறையில் சிறந்த பணிபுரிந்தமைக்காக மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் இணை ஆணையாளர் (சுகாதாரம்) பி.மதுசுதன் ரெட்டி, இணை ஆணையாளர் (கல்வி) சங்கர்லால் குமாவத், துணை ஆணையாளர் (பணிகள்) பி.குமாரவேல் பாண்டியன், துணை ஆணையாளர் (வருவாய்) ஜெ.மேகநாத ரெட்டி, வட்டார துணை ஆணையாளர்கள் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஷ், பி.என்.ஸ்ரீதர், பி.ஆகாஷ், தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள், சென்னை மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *