செய்திகள்

கொரோனா சிகிச்சை முடிந்து பணிக்கு திரும்பிய காஞ்சீபுரம் கலெக்டர் பா.பொன்னையா

காஞ்சீபுரம், ஆக 1 –

கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை முடிந்து 21 நாட்களுக்குப் பிறகு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா பணிக்கு திரும்பினார்.

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வருபவர் பா.பொன்னையா, இவர் கடந்த 11ம் தேதி முதல் தன்மை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். ஜூலை 15ம் தேதி கொரோனா நோய் தொற்று உறுதியானதை தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் 21 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் கலெக்டர் அலுவலகத்திற்கு பணிக்கு வந்தார்.

பணிக்கு திரும்பிய கலெக்டருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.சண்முகப்பிரியா, சப்-கலெக்டர் சரவணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது)நாராயணன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்து வரவேற்றனர்.

கலெக்டர் பா.பொன்னையா அத்திவரதர் எடுத்த நேரத்திலும் சரி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளிலும் மாவட்ட மக்களுக்காக அயராது பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *