செய்திகள்

கொரோனா சிகிச்சையில் குணமடைந்து பணிக்கு திரும்பிய அண்ணாநகர் துணை கமிஷனர் முத்துசாமி

கொரோனா சிகிச்சையில் குணமடைந்து பணிக்கு திரும்பிய அண்ணாநகர் துணை கமிஷனர் முத்துசாமி:

கமிஷனர் விசுவநாதன் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்

 

சென்னை, மே 25–

கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய, அண்ணாநகர் காவல் துணை கமிஷனர் முத்துசாமி மற்றும் 2 காவலர்களை கமிஷனர் ஏ.கே. விசுவநாதன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து வரவேற்றார்.

சென்னை பெருநகர காவல், அண்ணாநகர் காவல் துணை கமிஷனர் முத்துசாமி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார். பின்னர் பூரண குணமடைந்து மருத்துவர்கள் அறிவுரைப்படி இன்று பணிக்கு திரும்பினர்.

இதைத் தொடர்ந்து சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் ஏ.கே. விசுவநாதன், அண்ணாநகர் காவல் துணை கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் சென்று துணை கமிஷனர் முத்துசாமியிடம் உடல் நலம் குறித்து கேட்டறிந்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து வரவேற்றார்.

மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, இன்று பணிக்கு திரும்பிய அண்ணாநகர் காவல் துணை கமிஷனரின் உதவி காவலர் மற்றும் வாகன ஓட்டுநர் ஆகியோருக்கும் கமிஷனர் ஏ.கே. விசுவநாதன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா, (தெற்கு), எச்.எம்.ஜெயராம் (தலைமையிடம்), (பொறுப்பு வடக்கு கூடுதல் ஆணையாளர்), மேற்கு மண்டல இணை கமிஷனர் பி.விஜயகுமாரி, காவல் துணை கமிஷனர்கள் பி.பகலவன் (அடையாறு), ஆர்.திருநாவுக்கரசு (நுண்ணறிவுப்பிரிவு), எம்.சுதாகர் (நுண்ணறிவுப்பிரிவு), கே.ராஜேந்திரன் (மத்திய குற்றப்பிரிவு) மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *