செய்திகள்

கொரோனா: களை கட்டுமா? காணும் பொங்கல்

மாட்டுப் பொங்கலன்று திருவள்ளுவர் தினமும் வருகின்றது. நாத்திகர்களாலும் மறுக்க முடியாத தெய்வப் புலவர் திருவள்ளுவர். கடவுள் வாழ்த்தோடு திருக்குறளைத் தொடங்கும் வள்ளுவப் பெருந்தகை, காதலுடன் அவ்வரிய நூலை நிறைவு செய்கின்றார்.நீதி, நேர்மை, உண்மை, துறவு, அரசு நீதி, காதல் என்று அவர் பாடாத விஷயமே இல்லை. திருவள்ளுவர் தினத்தன்று வள்ளுவர் கூறிய அறநெறிப் பாடல்களை நாமும் ஓதி, இளைய சமுதாயத்தினருக்கும் அவற்றின் பொருட்களை உணர்வித்தலே உண்மையான ‘வள்ளுவ பூஜை’ யாகும். இந்நன்னெறியை தமிழர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

பெண்கள் தங்கள் சகோரர்களின் நலனுக்காகச் செய்வது ‘கணு’ பொங்கல்.

அன்று காலை நீராடி, வெறும் வயிற்றுடன், வெட்ட வெளியில் சூரியக் கோலமிட்டு, அதில் பொங்கல், கரும்பு போன்றவற்றை வைத்து, ஆதவனுக்கு அர்ப்பணிப்பர்.

‘காணும் பொங்கலும்’ இந்த நன்னாளே! அன்று புத்தாடை அணிந்து சுற்றத்தாரையும், நண்பர்களையும் பார்த்து அளாவி மகிழ்வது வழக்கம். சிலர் இன்பச் சுற்றலாவும் சென்று களிப்பர். ஒரு காலத்தில் எல்லாச் சந்தர்பங்களிலுமே சொந்தமும், நட்பும் அடிக்கடி சந்தித்து மகிழும் பண்பாடு இருந்தது.

கொரோனா ஊரடங்கு

ஆனால் இந்த ஆண்டு கொரோனா நோய் பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்படடது. தற்போது தளர்வுகள் நீக்கப்பட்டு மக்கள் சகஜ நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

கொரோனா நோய் பரவலை தடுக்க சென்னை கடற்கரையில் கடந்த வாரம் புத்தாண்டு கொண்டாட்டம் தடை செய்யப்பட்டது. அதே போல் காணும் பொங்கலுக்கும் மெரீனா உள்ளிட்ட சுற்றலா தளங்களிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படுமா? அல்லது மக்கள் பொது இடங்களில் காணும் பொங்கலை கொண்டாட தடை விதிக்கப்படுமா? என்பதை பொறுத்தே காணும் பொங்கல் களை கட்டுமா? என்பது தெரியவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *