செய்திகள்

‘கொரோனா’ கட்டுக்குள் வந்தபின் தான் சினிமா தியேட்டர் திறப்பு

‘கொரோனா’ கட்டுக்குள் வந்தபின் தான் சினிமா தியேட்டர் திறப்பு:

அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

கோவில்பட்டி, மே 26–

கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தபின் தான் சினிமா தியேட்டர் திறப்பு பற்றி யோசிக்க முடியும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று கோவில்பட்டிக்கு சென்றார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தியேட்டர் திறப்பு குறித்து நிருபர்கள் கேட்டதற்கு கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வந்த பிறகு தான் தியேட்டர் திறப்பதை பற்றியே யோசிக்க முடியும் என்று கூறினார்.

திரையரங்கு உரிமையாளர்கள், நடிகர் சங்க பிரதிநிதிகள், தயாரிப்பாளர்கள் சங்க பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து ஒரு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தால் இதுகுறித்து பேசலாம். தியேட்டர்கள் மட்டுமின்றி திருமண மண்டபங்கள், மால்கள், வழிபாட்டு தலங்கள் அனைத்திற்கும் இதே விதிமுறை தான் என்றும் அமைச்சர் கூறினார்.

நடிகர்களின் சம்பள குறைப்பு பற்றி கேள்வி எழுப்பியபோது ‘நடிகர்களின் சம்பள பிரச்சினையில் அரசு தலையிடாது’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *