செய்திகள் போஸ்டர் செய்தி

கொரோனா: உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 18,810ஆக உயர்வு

Spread the love

புதுடெல்லி, மார்ச் 25

சீனாவின் உகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரம் பேர் பலியானார்கள். இதைத் தொடர்ந்து பலியானோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 810ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இன்று காலை நிலவரப்படி, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 562 ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 40 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் ஒருவர் பலியானதையடுத்து, இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

மக்கள் விலகியிருத்தலை கடைப்பிடித்தால் வைரஸ் தொற்றை பெருமளவு தடுக்க முடியும். எனவே, 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் நடமாட்டம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *