செய்திகள்

‘கொரோனா’ உகான் ஆய்வகத்திலேயே தோன்றியது: இங்கிலாந்து உறுதி

லண்டன், மே 31–

‘சீனாவின் உகான் ஆய்வகத்திலிருந்து கசிந்த வைரஸ் தான் கொரோனா என்பதற்கு சாத்தியக்கூறு உள்ளது’ என, இங்கிலாந்து உளவு அமைப்புகள் உறுதிபட நம்புவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உகான் ஆய்வகத்தில் 2019–ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆய்வில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சியாளர்கள் பலர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதாக அமெரிக்க உளவு அமைப்பின் அறிக்கை வெளியானது. இதைத் தொடர்ந்து, ‘கோவிட் தொற்றின் தோற்றம் குறித்து விரைந்து விசாரணை நடத்தி 90 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்’ என அமெரிக்க உளவு அமைப்புகளுக்கு அதிபர் ஜோ பிடன் உத்தரவிட்டார். ஆனால், ‘உகானில் தான் கொரோனா தோன்றியது’ என்பதை சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்நிலையில், ‘சீனாவின் உகான் ஆய்வகத்திலிருந்து கசிந்த வைரஸ் தான் கொரோனா என்பதற்கு சாத்தியக்கூறு உள்ளது’ என, இங்கிலாந்து உளவு அமைப்புகள் நம்புவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து, இங்கிலாந்து தடுப்பூசிகள் துறை அமைச்சர் ஷகாவி கூறுகையில், ‘கொரோனா தோற்றம் குறித்து உலக சுகாதார அமைப்பால் முழுமையாக விசாரிக்க முடியும். பலகட்ட விசாரணையை நடத்த அனுமதிப்பது முக்கியமானது. அப்போதுதான் கொரோனா தொற்றின் ஆரம்ப பரவல் குறித்து நன்கு புரிந்துகொள்ள முடியும்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *