செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவில் முழு ஊரடங்கு: ராகுல் காந்தி வலியுறுத்தல்

டெல்லி, மே 4–

கொரோனாவை கட்டுப்படுத்த, ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானத்தை உறுதிப்படுத்திவிட்டு, முழு ஊரடங்கை அமல்படுத்துவது ஒன்றே தீர்வு என்று, ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3,57,229 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கொரோனா மொத்த கொரோனா பாதிப்பு 2,02,82,833 ஆக அதிகரித்துள்ளது. இதனால் மாநிலங்களில் கொரோனா பாதிப்புக்கு ஏற்றவாறு, ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில், “கொரோனா பரவலை தடுக்க, நாடு முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது ஒன்றே தீர்வு. மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால், கொரோனாவால் பலர் உயிரிழந்து வருகின்றனர்.

எனவே ஏழைகளுக்கு குறைந்த பட்ச வருமானத்தை உறுதி செய்து அறிவித்துவிட்டு, முழு ஊரடங்கு திட்டத்தை அமல்படுத்துவது ஒன்றே, கொரோனாவை கட்டுப்படுத்தும் சிறந்த வழி என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *