செய்திகள் வர்த்தகம்

குழந்தைகளுக்கு மிட்டாய் வடிவில் கொரோனா தடுப்பூசி மருந்து

இருதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் கே.எம். செரியன் குழு பரிந்துரை

சென்னை, ஜூன். 13–

கொரோனா வைரஸ் மூன்றாவது அலை விரைவில் வரக்கூடும் என்றும் இது சிறுவர்களை பெருமளவில் தாக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதிலிருந்து குழந்தைகளை காக்கும் வகையில் பிராண்டியர் லைப் மருத்துவமனை தலைவர் மருத்துவர். கே.எம். செரியன் மற்றும் நுண்ணுயிர் ஆராய்ச்சியாளர்கள், ஐ.ஐ.டி. நிபுணர்கள் ஆகியோர் இணைந்து புதியதாக ”கொரோனா கார்ட்” என்னும் இயற்கை சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக போராடும் ”கொரோனா கார்ட்” மருந்தின் செயல்பாடுகளை பற்றி எடுத்துறைக்கும் வகையில் இணையவழி கருத்தரங்கு நடத்தப்பட்டது. இந்த கருத்தரங்கில் ”கொரோனா கார்ட்” மருந்தின் செயல்பாடுகளை மருத்துவர் கே.எம். செரியன் எடுத்துறைத்தார்.

அப்பொழுது அவர் கூறியதாவது:

தேங்காய் எண்ணெய், கிராம்பு, பட்டை, மிளகு, புதினா ஆகியவற்றின் எண்ணெய் கொண்டு ”கொரோனா கார்ட்” மிட்டாய் வடிவில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மேலும் ஸ்ப்ரே மற்றும் திரவமாகவும் கிடைக்கும் இந்த மருந்தை மூக்கில் ஸ்பிரே அல்லது வாயில் ஊற்றி கொப்பளித்தும் கொள்ளலாம். இதன் மூலம் கொரோனா தொற்றை தடுக்கலாம்.

இந்த எண்ணெய் கலவையானது கொரோனா நுண்கிருமி நம் உடலுக்குள் செல்லும்போது அதனுடன் சென்று இந்த நுண்கிருமியின் கொழுப்பை சிதைத்து செயலிழக்கச் செய்துவிடுகிறது.

இந்த மருந்தை பிலிப்பைன்ஸ் நாட்டு விஞ்ஞானத்துறை ஏற்கனவே பரிசோதித்து வெற்றி கண்டுள்ளது .

கொரோனா நுண்கிருமி, ஒருவர் உள்ளிழுக்கும் மூச்சுக்காற்று வழியாக ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு செல்லும். பொதுவாகவே இந்த நோய் தொற்றினை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு குறைவாக இருக்கும் கிராமப்புறங்களில் எளிய முறையில் பயன்படுத்தக்கூடிய இந்த இயற்கை மருந்தை வழங்கலாம். இந்த கொரோனா கார்ட் மலிவான விலையில் கிடைப்பதால் அனைவருக்கும் பயனுள்ளதாகம் இருக்கும்.

அவர் மேலும் கூறுகையில், சீனா போன்ற நாடுகள் 3 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடத் துவங்கிவிட்டனர். சினோ வாக் பயோ டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அவசரக்கால பயன்பாட்டில் குழந்தைகளுக்கு செலுத்துவதற்காக சீனா அங்கீகரித்துள்ளது. அமெரிக்காவில் ஏற்கனவே 63% முதியோர்கள் தடுப்பூசி பெற்றுள்ளார்கள். 52% மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

திருவள்ளூரில் ஆய்வுக்கு அரசிடம் அனுமதி

ஆனால் இந்தியாவிலோ தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு வலியுறுத்தினாலும் மக்கள் அதை முறையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. மக்கள் தொகை பெரும் அளவில் இருப்பதால், மாற்றுமுறை சிகிச்சைகளையுக் அரசு ஆய்வு செய்து ஆதரவு அளிக்க வேண்டும் என்கிறார் மருத்துவர்.கே.எம். செரியன்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா கார்ட் மருந்திற்கான ஆய்வு மேற்கொள்ள அரசு அதிகாரிகளிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

செங்கல்பட்டில் மருத்துவ அறிவியல் பூங்கா

சென்னைக்கு அருகே செங்கல்பட்டில் தடுப்பூசி மருந்து உற்பத்தி ஆலை செயல்பாட்டை துவங்குவதுடன் இந்த வளாகத்தில் மருத்துவ அறிவியல் பூங்கா நிறுவவும் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் மருத்துவர் கே. எம். செரியன் வலியுறுத்துகிறார்.

இந்த கருத்தரங்கில் திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை மருத்துவர் கே. ஆர். ஜவகர்லால், மருத்துவர் ஆர்.கோவிந்தராஜ், கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி. ரமேஷ் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளர் மருத்துவர் பி.மணவாளன் ஆகியோர் கலந்து கொண்டனர் .

சென்னை ஐஐடி உயிரி தொழில்நுட்பவியல் ஆராய்ச்சியாளர் கவிதா கோவர்தன் இந்த கொரோனா கார்ட் திட்டம் பற்றி விளக்க காட்சியளித்தார் .

இந்த கொரோனா கார்டு மருந்தை கண்டுபிடித்த மருத்துவர்கள் கே. ராமு, கிருஷ்ணன் காணொளி மூலம் இந்த கருத்தரங்கில் பங்கேற்று இதன் செயல்பாடுகள் பற்றி விளக்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *