செய்திகள்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் மாதாந்திர உதவித்தொகை உயர்வு

புதுடெல்லி, செப்.15-

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் மாதாந்திர உதவித்தொகை ரூ.4 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று நோயால் பெற்றோர்களை, சட்டபூர்வ பாதுகாவலர்களை, தத்து பெற்றோரை இழந்த குழந்தைகள், குழந்தைகளுக்கான பிரதமர் நிதி உதவி திட்டத்தின்கீழ் ஆதரிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு கடந்த மே மாதம் அறிவித்தது.

இந்த திட்டத்தின்கீழ் பலன் பெறுவதற்காக இதுவரை 3,250 விண்ணப்பங்கள், மத்திய அரசால் பெறப்பட்டுள்ளன. 667 விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் அங்கீகரித்துள்ளனர்.

இந்த நிலையில், இத்திட்டத்தின்கீழ் பலன் பெறுகிற குழந்தைகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.2,000-ல் இருந்து ரூ.4,000 ஆக உயர்த்துவதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

இது தொடர்பான திட்ட முன்வடிவம், அடுத்த சில வாரங்களில் மத்திய மந்திரிசபையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஒப்புதலுக்குப் பின்னர் கொரோனாவால் பெற்றோரை, சட்டபூர்வ பாதுகாவலர்களை, தத்து பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.4,000 ஆக உயர்த்தி முறையான அறிவிப்பு வெளியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *