செய்திகள்

கொரோனாவால் ஏழையான 3 கோடியே 30 லட்சம் இந்தியர்

டெல்லி, மார்ச் 24–

கொரோனா வைரஸ், கடந்த ஒரே ஆண்டில் மட்டும் 3.3 கோடி இந்தியர்களை, நடுத்தர நிலையிலிருந்து ஏழ்மை நிலைக்கு தள்ளியுள்ளது.

கொரோனா பெருந்தொற்று உலக நாடுகளை ஆட்டிப்படைக்க ஆரம்பித்து ஒரு ஆண்டு முடிவடைந்தது. ஆனால் இன்னும் உலக நாடுகளால் இந்த கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீள முடியவில்லை. பெரும்பாலான நாடுகளும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள கடுமையாக போராடி வரும் நிலையில், பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா தொற்றால் 3.2 கோடி இந்திய மக்கள் நடுத்தர நிலையிலிருந்து ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஏழையான 3.3 கோடி பேர்

இந்தியாவில் நாள் ஒன்றிற்கு ரூபாய் 700-இருந்து 1400 ரூபாய் வரை வருமானம் ஈட்டும் 3.3 கோடி மக்கள், கொரோனா பெருந்தொற்று ஊரடங்கால், கடந்த ஒரே ஆண்டில் மட்டும் நடுத்தர நிலையிலிருந்து ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று அமெரிக்காவைச் சேர்ந்த பியூ என்ற நிறுவன ஆய்வில் தெரியவந்துள்ளது.

தற்போது ஏற்பட்ட கொரொனா பாதிப்பால், நடுத்தர மக்களின் எண்ணிக்கை, இந்தியாவில் 9.9 கோடியிலிருந்து 6.6 கோடியாகச் சரிந்துள்ளது. மேலும் கொரோனா தொற்று முதலில் தொடங்கிய சீன நாட்டைக்காட்டிலும் இந்தியாவில் வறுமையால் பாதிக்கப்பட்டவர்களின் சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில் கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட வேலையிழப்புகள் மற்றும் இந்த ஆண்டில் 10% வரை பெட்ரோல் விலை அதிகரித்தது போன்ற காரணங்களால், மக்கள் மத்தியில் ஏற்பட்ட வருமான இழப்புகள், பணப் பற்றாக்குறை போன்றவை மக்களை ஏழ்மை நிலைக்குத் தள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க:

வீட்டிலிருந்து வேலை பார்ப்பதன் எதிரொலி: 2 படுக்கையறை வீடு வாங்குவது அதிகரித்துள்ளது; ஆய்வு அறிக்கை தகவல்

சீன ஆய்வில் அதிர்ச்சி தகவல் – 24 வகை வவ்வால் கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

சீனாவில் ஐஸ்கிரீமில் இருந்து கொரோனா வைரஸ் பரவியது: ஆய்வில் கண்டுபிடிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *