கர்னூல், நவ. 16–
ஆந்திராவில் உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற 3 வயது குழந்தை கொதிக்கும் சாம்பாரில் விழுந்த பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், எமிக்கனுர் அடுத்த எர்ரகோட்டாவை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி ராமேஸ்வரம்மா. இவர்களது மகன் சோமநாத் (வயது 3). எமிக்னூரில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக நாகராஜ் தனது மனைவி குழந்தையுடன் சென்று இருந்தார். உறவினர் வீட்டி குழந்தை சோமநாத் விளையாடிக் கொண்டிருந்தான். ற்கு சென்ற நாகராஜ் உறவினர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார்.
நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்களுக்கு பரிமாறுவதற்காக வீட்டில் தடல் புடலாக சமையல் செய்து கொண்டு இருந்தனர். வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டு இருந்த சோமநாத் சமையல் செய்யும் இடத்திற்கு சென்றான். அப்போது சமையல் செய்பவர்கள் அடுப்பில் இருந்து கொதிக்க கொதிக்க அண்டாவில் சாம்பாரை கீழே இறக்கி வைத்துவிட்டு அவர்களது வேலையை பார்த்துக் கொண்டு இருந்தனர்.
சோமநாத் எதிர்பாராத விதமாக அண்டாவில் இருந்த சாம்பாரில் விழுந்து அலறி துடித்தான். சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு பதறி அடித்து ஓடிய உறவினர்கள் மற்றும் அவரது பெற்றோர் சிறுவனை மீட்டனர். அங்குள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.