செய்திகள்

கொடைக்கானல் நகர் பகுதிகளில் கொரோனா பாதிப்பு

கொடைக்கானல், ஜூலை.1–

கொடைக்கானல் நகர் பகுதிகளில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கோடை வாசஸ்தலமாக விளங்கும் கொடைக்கானலின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தற்போது கொடைக்கானல் நகரின் மைய பகுதியாக விளங்கக்கூடிய உகார்த்தேநகர் பகுதியில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் உறவினர்கள் வீடுகளில் வந்து தங்கியதாகவும், அவர்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் இரண்டு நாட்கள் தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

உகார்த்தேநகர் பகுதியில் நகராட்சி ஆணையர் நாராயணன் தலைமையில் சுகாதார பணியாளர்கள் மற்றும் பொறியாளர் பிரிவினர், மருத்துவ குழுக்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் என பல்வேறு குழுக்கள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் கொரோனா நோய் தொற்றியுள்ள அவர்கள் தங்கியிருந்த வீடுகளை சுற்றி தகரத்தால் வேலி அமைக்கப்பட்டு 14 நாள் தனிமைப்படுத்திக் கொள்ளவும், மேலும் அவர்களுக்கு மருத்துவ சோதனை செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த பகுதியில் உள்ள அனைத்து சாலைகளிலும் பிளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு போடப்பட்டுள்ளது. அத்துடன் அந்த பகுதியை சுற்றிலும் பல முறை கிருமிநாசினிகள் அடிக்கப்பட்டுள்ளது.

இதற்கான பணியினை நகராட்சி ஆணையர் நாராயணன் உத்தரவின்பேரில் சுகாதார ஆய்வாளர் பாண்டி செல்வம் மற்றும் தூய்மை பணியாளர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர். தொடர்ந்து பிளாக் மெடிக்கல் மருத்துவர் டாக்டர் சந்தோஷ் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும், அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் அப்பகுதியில் மாலை நேரங்களில் ஆய்வு மேற்கொண்டார். காவல்துறையினர் அந்த பகுதியில் கண்காணிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து நகராட்சி ஆணையர் நாராயணன் இந்த பகுதிகளில் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *