செய்திகள்

கொடைக்கானலில் 150 பேருக்கு ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ்

கொடைக்கானலில் 150 பேருக்கு ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு

 

கொடைக்கானல், ஜூன்.30–

கொடைக்கானலில் இந்திய பிரதம மந்திரி மோடியின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூபாய் 5 லட்சத்திற்கான காப்பீட்டுத் திட்டத்தின் அடையாள அட்டையினை மாநில பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை 150 பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்திய பிரதமர் மோடி “ஆயுஷ்மான் பாரத்” என்ற திட்டத்தின் மூலம் ரூ 5 லட்சத்திற்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அறிவித்திருந்தார். அதன்படி கொடைக்கானலில் மாநில பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை பயனாளிகளுக்கு அடையாள அட்டையினை வழங்கினார். இதன் முதல்கட்டமாக கொடைக்கானலில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நிவாரணம் மற்றும் உணவுகளையும் தயாரித்து வழங்கிய நிலையில் தற்போது பாரத பிரதம மந்திரி அறிவித்திருந்த 5 லட்சத்துக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தில் முதல் கட்டமாக சுமார் 150-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கி சிறப்பித்தார்.

தொடர்ந்து இத்திட்டத்தை கொடைக்கானல் நகர் மற்றும் கீழ் மலை, மேல் மலை கிராம பகுதிகளுக்கும் மலைவாழ் மக்களுக்கும் கொண்டு செல்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வரப்படுகிறது. இதற்காக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகளும் இத்திட்டம் குறித்து மக்களுக்கு எடுத்துரைத்து அதற்கான பணிகளை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *