போஸ்டர் செய்தி

கொடைக்கானலில் கோடைவிழா: கிளி, நந்தி, ஒட்டக் சிவிங்கி உருவத்தை மலர்களால் வடிவமைத்து கண்காட்சி

கொடைக்கானல்,மே.30–

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் இன்று கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சியை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்.

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் ஆண்டுதோறும் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தாண்டு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இன்று கொடைக்கானலில் துவங்கியது. கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் இன்று முதல் ஜூன் 1–ந் தேதி வரை நடைபெறும். மலர் கண்காட்சியை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து கோடைவிழாவும் கலையரங்கில் துவங்கியது. வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் கோடை விழா துவக்கி வைத்து பேசினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வினய், நிலக்கோட்டை அண்ணா தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி, கொடைக்கானல் நகராட்சி ஆணையர் முருகேசன், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி வேலு, கொடைக்கானல் அண்ணா தி.மு.க. நகர செயலாளர் ஸ்ரீதர், அண்ணா.தி.மு.க செயலாளர் மருதராஜ் உள்ளிட்ட அதிகாரிகள், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டார்கள்.

கோடை விழா ஜூன் 8–ந் தேதி நடைபெறுகிறது. இவ்விழாவில் பாரம்பரிய கிராமிய கலை நிகழச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், வீர விளையாட்டுகள் , படகுகள் அலங்கார அணிவகுப்பு, நாய் கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

மலர் கண்காட்சியையொட்டி பிரையண்ட் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் வண்ண வண்ண கார்னேசன் மலர்களால் பல உருவங்கள் அமைக்கப்பட்டு காட்சி வைக்கப்பட்டுள்ளன. மயில், ஒட்டகசிவிங்கி, தாஜ்மஹால், நந்தி, கிளி, பெருமாள் போன்ற உள்ளிட்ட பல உருவங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டு இருப்பதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *