சிவானி தனியாகத்தான் கல்லூரிக்குச் சென்று வருவாள். வீட்டிற்கும் கல்லூரிக்கும் குறைந்த தூரம் என்பதால் அவள் நடந்து போய் நடந்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். தைரியமும் திறமையும் ஒருசேரப் பெற்ற பெண் என்பதால் அவளுக்கு பயம் என்றால் கொஞ்சம் தூரம் தான்.
வீட்டில் இருப்பவர்கள் கூட தனியாகக் கல்லூரிக்கு போய் வருகிறாளே? என்று பயந்தாலும் அவளுக்கு ஒருபோதும் எதுவும் நடந்து விடாது என்று மன தைரியமும் நம்பிக்கையும் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு நிறையவே இருந்தது.
யாரையும் எதிர்பார்க்காமல் காலையில் கல்லூரிக்கு செல்வதும் மாலையில் திரும்பி வருவதும் தனியாகத்தான் வருவாள். சில நேரங்களில் உடன்படிக்கும் நண்பர்கள் இருந்தால் பேசிக் கொண்டே வருவாள். இல்லையென்றால் இயர்பாேனில் பாடல் கேட்டுக்கொண்டே வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள் ஷிவானி. அப்படி அவள் தினமும் போகும்போது, பைத்தியம் மாதிரி இருக்கும் ஒருவச், ஒரு நாள் அவளை இடைமறிக்க முதலில் பயந்தவள் பின் சுதாரித்துக் கொண்டு
“என்ன வேண்டும்? “
என்று தைரியமாகக் கேட்டாள். தலையைச் சொரிந்து கொண்ட அந்தப் பைத்தியக்காரன்
” சாப்பிட ஏதாவது குடுங்க”
என்று கேட்க
தன் கையில் இருந்த உணவை அந்தப் பைத்தியக்காரனுக்கு கொடுத்தாள். அதை வாங்கிய பைத்தியக்காரன் ஷிவானிக்கு நன்றி கூறினான். தினமும் அவள் கல்லூரிச் செல்லும் போதெல்லாம் அந்தப் பைத்தியக்காரன் குறுக்கே வருவதும் ஷிவானியிடம் ஏதாவது கேட்பதும் இருந்தான் .நாளடைவில் அந்தப் பைத்தியக்காரனுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும்
என்று அவளுக்குத் தெரிந்தது அவனுடைய உடை, குளிக்காத அழுக்கடைந்த தேகம் என்று அவனைப் பார்த்தாலே யாரும் அருகில் செல்ல மாட்டார்கள். ஆனால் ஷிவானி வந்தால் அந்தப் பைத்தியக்காரன் ஒரு குழந்தையைப் போல் சிரித்துக் கொண்டு ஷிவானியிடம் ஏதாவது கேட்டு வாங்கிக் கொள்வான். இது தினமும் நடந்து கொண்டிருந்தது. அவனுக்காகவே வீட்டிலிருந்து எதையாவது ஒன்றை எடுத்துக் கொண்டு வருவாள் ஷிவானி.
அந்தப் பைத்தியக்காரனின் மனநிலையை ஷிவானி சரியாக புரிந்து வைத்துக் கொண்டிருந்தாள்.
ஏதோ இல்லை என்று தான் நம்மிடம் கேட்கிறார்? நம்மால் முடிந்ததை கொடுக்கலாமே? “
என்று அவள் அந்தப் பைத்தியக்காரன் கேட்க மறந்தாலும் ஷிவானி அதை மறப்பதில்லை .அவனுக்கு உணவு அளிப்பதில் அவளுக்கு பெரிய சந்தோஷம் இருந்தது .இப்படியாக தினமும் அந்தப் பைத்தியக்காரனுக்கு சாப்பிடுவதற்கு உணவும் கொஞ்சம் பணமும் கொடுப்பாள்.
“இது தவறு இல்லையா ? அவனை உழைக்க விடாமல் செய்கிறோமே ? என்றெல்லாம் அவள் அறிவு வேலை செய்தாலும் இதயத்தை மட்டும் நேசித்தாள்.
ஒரு நாள் கல்லூரி தாமதமாக முடிந்தது .அவள் திரும்பி வருவதற்கு இரவானது. வீட்டில் உள்ளவர்களுக்கும் போன் செய்து நான் வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டாள் அபர்ணா
“நம் பெண் தைரியமானவள் . அவளை யார் என்ன செய்து விடப் போகிறார்கள் ? எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வந்து விடுவாள் “
என்று வீட்டில் இருந்தவர்கள் சாதாரணமாக நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
அன்று என்னைக்கும் இல்லாமல் அவள் வரும் வழியில் குடித்து கும்மாளம் போட்டுக் கொண்டு இருந்தார்கள் சில நபர்கள் .
இவள் வருவதைப் பார்த்து கிண்டலும் கேலியும் செய்ய, அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை
” உங்க வீட்டுல அக்கா, தங்கச்சிங்க இல்லையா? இப்படியா நடந்துக்கிறது”
என்று கேட்க
” எங்க வீட்டில அக்கா தங்கச்சி இருக்காங்க .அதுக்கு என்ன இப்போ ? “
என்று கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள் அப்போது எங்கிருந்து வந்தானாே அந்தப் பைத்தியக்காரன் ஷிவானியை தவறாக தொடப்போன ஒருவனை நையப் புடைத்தான் .அங்கிருந்த ஆட்களை விரட்டி அடித்தான். இந்தப் பைத்தியக்காரன் கையில் சிக்கினால் அவ்வளவுதான் என்று தலைத்தெறிக்க ஓடினார்கள் அந்த நபர்கள் .
ஷிவானியிடம் என்ன பேசுவது என்று தெரியாத அந்தப் பைத்தியக்காரன் தன் தலையைச் சொரிந்து கொண்டே சைகையில் வீட்டுக்குப் போ என்று கையை மட்டுமே ஆட்டினான். அவனுடைய உடை, அவனுடைய அழுக்கு தேகம் எல்லாம் அவளுக்கு என்னவோ செய்தது. நாம் இப்படி எல்லாம் நடக்கும் என்று இந்த பைத்தியக்காரனுக்கு உதவி செய்யவில்லை. ஆனால் சரியான நேரத்தில் நம்மை வந்து காப்பாற்றி இருக்கிறான். நாம் ஏது செய்தாலும் அதற்கு எதிர்வினை இருக்கும். நல்ல மனிதர்கள் எல்லாம் பைத்தியக்காரர்களாக நடந்து கொள்ளும் போது, இந்திய பைத்தியக்காரன் மட்டும்தான் நல்ல மனிதனாக நடந்து கொண்டான் “
என்று நினைத்த ஷிவானி அந்தப் பைத்தியக்காரனைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தாள்.
“வீட்டுக்குப் பாே “
என்று தன்னுடைய கையை சைகை செய்து காட்டிக் கொண்டே இருந்தான்.
மறுநாள், அந்தப் பைத்தியக்காரன் சாப்பிடுவதற்கு தேவையான அத்தனையும் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாள், அபர்ணா. அவளையும் அறியாமல் அவள் கண்களில் கண்ணீர் பெருகியது.